திருவள்ளுவரின் திருக்குறள்

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.



அரிய செயல் என்று எதுவும் இல்லை தேவையான கருவியும் காலமும் அறிந்து செயல்பட்டால்.



(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.



செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.



தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.


Can any work be hard in very fact,
If men use fitting means in timely act?.


Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?.



aruvinai yenpa uLavoa karuviyaan
kaalam aRindhu seyin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

காலம் அறிய மற்ற உயிர்களின் நடத்தையை ஆய்ந்து அதைப்போல் நாமும் காலத்தை தக்கபடி பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக வாழவேண்டும். பகல் சாதமான சுழலை ஆந்தைக்கு தருவதில்லை என்பதால் இரவில் வேட்டையாடும். காலம் கருதி கத்திருப்பதே அனைத்திற்கும் ஆதாரம். தகுந்த காலத்தில் சரியாக செயல்கள் முடித்துக் கொள்ளவதே வெற்றிக்கு அடிப்படை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.