திருவள்ளுவரின் திருக்குறள்

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.



நடைமுறைக்கு ஒத்துவராது என்று அறிந்தும் துவங்கினால் பலரால் பாராட்டப் பட்டாலும் தடைப் பட்டுவிடும்.



தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.



ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.



எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.


On no right system if man toil and strive,
Though many men assist, no work can thrive.


The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.



aatrin varundhaa varuththam palarnhindru
poatrinum poththup padum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வரவும் செலவும் வரும் ஆதாயமும் ஆராய்ந்து செயல்பட வேண்டும் பழகியவர்கள் இடத்திலேயே தேவையானவர்களை தேர்ந்தெடுத்து செயல்பட்டால் தோல்வி வராது. செயல்படும் முன் சிந்திக்க வேண்டும் செயல்பட துவங்கிய பின் சிந்திப்பது தவறு. நன்மையிலும் தீமை உண்டாகும் காரணம் அதை பெறுபவர் பண்பைப் பொருந்ததே. பிறர் இகழாதபடி நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.