திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: ஊழ் / Fate

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.



நுட்பம் நிறைந்த நூல்கள் பல படித்தாலும் மாறாக பிறவியால் பெற்ற உண்மையான அறிவே மிகும்.



ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.



பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது).



கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.


In subtle learning manifold though versed man be,
'The wisdom, truly his, will gain supremacy.


Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.



nuNNiya noolpala kaRpinum matrundhan
uNmai yaRivae migum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பிறவிப் பயன் பொருத்தே ஆர்வமும் சோர்வும் தோன்றுகிறது. அறிவு சார்ந்த நூல்கள் கற்றாலும் தன் பிறவி அறிவே மேலோங்கி இருக்கிறது. தவறு சரியாகவும் சரி தவறாகவும் பிறவிப்பயனால் மாறுகிறது. இரு வேறு உலகம் இருக்கிறது திருவுடையவன் தெளிந்தவன் என உயர்வைதருகிறது. விதி என்ற பிறவிப் பயன் மட்டுமே மற்றவே முடியாத நிலையில் இருக்கும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.