திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நிலையாமை / Instability

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.



புகலிடம் அமையாமல் அலைகிறதோ உடம்பில் சிலகாலம் இருக்கும் உயிர்.



(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.



உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!.



உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.


The soul in fragile shed as lodger courts repose:-
Is it because no home's conclusive rest it knows?.


It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.



pukkil amaindhindru kolloa udampinuL
thuchchil irundha uyirkku


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நிலையற்றதை நிலை என்று நினைக்கும் அறிவுள்ள யாரும் கிழானவர்களே. சிறுக சேர்ந்த கூட்டம் உடனே வெளியேறும் கூத்டாட்டு மைதானத்தின் நிகழ்கவே செல்வத்தின் நிலை. உலகின் சிறப்பே நேற்று இருந்தவர் இன்று இல்லை என்பதாகும். எனது என்ற பற்று அறுத்தவனே எல்லாம் உடையவன். மரணமும் நிலையின்றி தூக்கம் போல் நித்தம் நிகழ்கிறது. ஏதார்த்த சூழலை உணர்ந்தவரே பிறப்பை முடித்துக் கொள்கிறார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.