திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வெகுளாமை / Restraining Anger

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.



இன்பத்தையும் கொண்டாட்டத்தையும் கொன்றுவிடும் சினத்தை விட வேறு பகையும் உண்டோ



முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?.



முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.



சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.


Wrath robs the face of smiles, the heart of joy,
What other foe to man works such annoy?.


Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?.



nakaiyum uvakaiyum kollum sinaththin
pakaiyum uLavoe piRa


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

சினம் செல்லுபடி ஆகாத இடத்தில் காப்பது பயன் அற்றது. சினம் தீமை பயப்பதால் அதை மறத்தல் வேண்டும். மகிழ்வையும் கொண்டாட்டத்தையும் அழிக்கும் பகைவனாக சினம் இருக்கிறது. தனக்கும் தன் இனத்திற்கும் எதிரியாக இருக்கும் சினத்தை தவிர்போம். உள்ளதை அடையும் ஆற்றலை இழக்கச் செய்யும் சினம். சினத்தை துறந்தவர் துறவிக்கும் மேலானவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.