திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கள்ளாமை / The Absence of Fraud

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.



திருட்டுத் தனத்தால் தோன்றிய காதல் விளைவிப்பது அழியா துன்பமே ஆகும்.



களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.



அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.



களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.


The lust inveterate of fraudful gain,
Yields as its fruit undying pain.


The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.



kaLavin-kaN kandriya kaadhal viLaivin-kaN
veeyaa vizhumam tharum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பிறர் ஏளனம் செய்யதிருக்க வேண்டும் என்றால் அடுத்தவர் பொருளை களவாட நினைக்க கூடாது. மனதளவிலும் கள்ளத்தனம் இல்லாதவரே நிறைவாக வாழ்வார். தேவையின் அளவு அறிந்தவர் திருடுவது இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.