திருவள்ளுவரின் திருக்குறள்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.



சொல்லவேண்டும் சொல்லுவதால் பயன் உண்டாகும்படி. சொல்லக்கூடாது சொல்லுவதால் பயன் உண்டாகாத சொல்லை.



சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.



சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.



பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.


If speak you will, speak words that fruit afford,
If speak you will, speak never fruitless word.


Speak what is useful, and speak not useless words.



solluka solliR payanutaiya sollaRka
solliR payanilaach sol


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

ஏளனத்திற்கு உரிமை கொண்டாடும் பயனற்றதை பேசுபவன் மக்கள் என்பதில்லை பதர் என்றே கொள்ளலாம், பயன் தராதவற்றை பெரியவர்கள் எப்பொழுதும் உரைப்பதில்லை. ஐயமற அறிந்தவர்கள் தேவையற்றதை சொல்லுவதில்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.