திருவள்ளுவரின் திருக்குறள்

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.



மிகைப் படுத்தி துன்பம் செய்தவரை நாம் நமது தகுதியால் வென்று விடலாம்.



செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.



மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.



ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.


With overweening pride when men with injuries assail,
By thine own righteous dealing shalt thou mightily prevail.


Let a man by patience overcome those who through pride commit excesses.



mikudhiyaan mikkavai seydhaaraith thaandham
thakudhiyaan vendru vidal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பொறுத்துக் கொள்ளும் பண்பு அவசியம் தன்னை வேட்டும் மனிதனையும் தாங்கும் பூமித் தாய் போல் வாழ் என்கிறார் வள்ளுவ பெருந்தகை. நமது தகுதியால் அடுத்தவர் தவிர்க்கப்படுவார் மேலும், அடுத்தவரின் அசட்டுத்துத் தனமாக வார்த்தைக்கு மதிப்பளிக்காதவரே நோன்பில் சிறந்தவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.