திருவள்ளுவரின் திருக்குறள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.



துப்பாதவருக்கு துப்பும் பொருளையும் உருவாக்கி துப்போவது போல் துவுவதே மழை.



உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.



நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.



யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி, அரிய தியாகத்தைச் செய்கிறது.


The rain makes pleasant food for eaters rise;
As food itself, thirst-quenching draught supplies


Rain produces good food, and is itself food



Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth
Thuppaaya Thoou Mazhai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வெட்டவெளியில் இருந்தே உலகம் தேன்றியது, அங்கிருந்தே மழை வருவதால் அதை அமிழ்தம் என்கிறேம். அது பூமியை மதித்து துப்பாதவர்களுக்கு துப்புகிறது. உள்ளிருக்கும் பசிக்கு உணவாகவும், உழவர்களுக்கு உற்ற துணையாகவும் சமயத்தில் புயலாகவும் இருக்கிறது. மழைத்துளி இல்லை என்றால் புல்லும் முளைக்காது. தானம், தவம், பக்தியால் செய்யும் பூசை அனைத்திற்கும் ஆதாரம் மழை. நீர் இல்லை என்றால் உயிர்களால் ஆன பூமி (உலகம்) இல்லை, வெட்டவெளி இல்லை என்றால் உயிர்களுக்கு ஒழுக்கம் இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.