திருவள்ளுவரின் திருக்குறள்

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.



காமம் என்ற கடுமையான நீர் பெருக்கு அழித்துவிடும் வாழ வைக்கும் நாணத்துடன் நல்ல ஆண்மை என்னும் தோணியை.



நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.



ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.



காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.


Love's rushing tide will sweep away the raft
Of seemly manliness and shame combined.


The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust.



kaamak kadumpunal uykkum naaNodu
nallaaNmai ennum puNai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

காமத்தின் வலி போக மடல் ஏறுதல் ஒருவகை தீர்வு தரும். இதை தவிர்க்க வெட்கத்தை விலக்கிடச் செய்யவேண்டும். நாணமும் நல்ல ஆண்மையும் காமத்தால் மடல் ஏறும். காமம் என்ற கொடிய வெள்ளம் நாணம் என்ற படகை கவிழ்த்துவிடும். மாலை நேரத்து துன்பத்தை வளையல் அணிந்தவள் தந்தாள். எந்த வேலையும் செய்யமுடியாத மடல் அடைந்தேன் பேதை அவளை என் கண் கண்டதால். கடல் அளவு காமம் இருந்தாலும் மடல் அடைய பெண் பெருமைக்குரியவள். நிறைவு அடையதவர் மதிக்கத் தகுந்தவர் இல்லை என்பதை அறியாமல் மறையாமல் காமம் வெளிப்படுகிறது. நம் ஏக்கம் அறியாதவர் நம் கண்ணில் படும்படியே நகைப்பர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.