மண்டல புருடரின் சூடாமணி நிகண்டு
சூடாமணி நிகண்டு  » நகரயெதுகை


« தகரயெதுகை 
பகரயெதுகை » 


125.  இந்தன மிசையே காட்டம் எரி யிடு கனலுமாகும்
சந்தமே நிறம் வனப்புச் சாற்றிய கவிதை சாந்தம்
கந்த மிந்திரியம் பகுத்தல் கழுத்தடி கிழங்கு நாற்றம்
மந்திரம் விசாரம் கோயில் வாசியின் குழாம் வீடே கள்.

126.  அந்திலாங் கசையிடப் பேர் அணவலே அணுகல் புல்லல்
சந்தியே அந்தி மூங்கில் சதுக்கமும் யிசைப்புமப்பேர்
நந்தியே சிவனு ேமுறும் நந்தி யீச்சுரனு முப்பேர்
உந்தி தேருருளே யாறே உவரி நீர் சுழியே கொப்பூழ்.

127.  கந்து பண்டியுளிரும்புங் கம்பமும் யாக்கைமூட்டும்
கந்துகங் குதிரை பந்தாங் கன மென்ப புயல் பாரப் பேர்
பந்து கந்துகமு மட்டுப்படர்நீர்தூந்துருத்தியும் பேர்
குந்தள மாதரோதி குழற்கொத்து குருளை முப்பேர்.

128.  வேந்தனே அரசன் திங்கள் வியாழ னிந்திர னாதித்தன்
காந்தார மிசை காடென்ப காழகங் கருமை தூசாம்
ஏந்தலே பெருமை மேடா மெஃ குருக்கொடு வேல் கூர்மை
கூந்தல் பெண் மயிர் பீலிப்பேர் குவலயங் குவளை பூமி.

129.  அந்தரம் முடிவு பேதம் அண்டமோடிடை நாற்பேரே
கந்தரமென்ப மேகங் கழுத்தொடு மலை முழைப்பேர்
மந்தாரந் தரு மரஞ் செவ்வரத்தமு மாகுமென்ப
சிந்துரம் புளியே யானை செங்குடை திலகம் செம்மை.

130.  கந்தருவம் பண்வாசி கவந்த மென்பது நீர் மட்டை
குந்தமே ஒரு வியாதி குருந்தொடு குதிரை கைவேல்
செந்துவோர் நரக மோரி சீவனோ டணுவு நாற்பேர்
சிந்து நீர் முச்சீ ராறு கடல் குற ளொறுதேசப்பேர்.

131.  அந்தி முச்சந்தி பாலையாழிசை இரவு மாலை
நந்தென்ப நத்தை சங்கா நாறுதல் மணமுண்டாதல்
மைந்தனே திறலோன் சேயாம் வசந்தமே வேனில் வாசம்
வந்தியர் புகழ்வோர் பேரு மலடிகள் பேருமாமே.

132.  விந்தமோ ரெண்ணும் வெற்பும் விருத்தமே வட்டம் மூப்பாம்
அந்தணர் அறவோர் பார்ப்பர் அணி படை வகுப் பணிப்பேர்
அந்தகன் குருடன் கூற்றாம் அங்காரகன் றீச்செவ்வாய்
மந்தகன் சனி கூர்ப்பில்லாமனுடனு மிருபேராமே.


« தகரயெதுகை 
பகரயெதுகை » 


Meta Information:
நகரயெதுகை, சூடாமணி நிகண்டு ,இலக்கணம், soodamani nigandu,மண்டல புருடர்,Tamil tutorial