மண்டல புருடரின் சூடாமணி நிகண்டு
சூடாமணி நிகண்டு  » யகரயெதுகை


« மகரயெதுகை 
ரகரயெதுகை » 


152.  காயம் மெய் விண் வெண்காயம் பெருங்காயங் கறி கரித்தல்
நேயம் நெய் எண்ணெய் யன்பாம் நிறமென்ப மருமங் காந்தி
ஆயமே கவற்றிற்றாயம் ஆதாயம் மாதர்கூட்டம்
சாயலென்பது மேம்பாடு தருமழகுடனே மென்மை.

153.  வய நீர் புட்பொது வலிப்பேர் வயல் வௌி பழனமும் பேர்
சயம் வெற்றி சருக்கரைப் பேர் சட முடல் வஞ்சம் பொய்யாம்
நியமமே நியதி வீதி நிச்சயம் நகரங் கோயில்
இயமென்ப வொலியே வார்த்தை வாச்சிய மிம்முப்பேரே.

154.  அயமென்ப நீர் தடாகம் ஆடு வெம்பரி யிரும்பாம்
கய மென்மை குளமே யாழங் களிறு கீழ் பெருமை தேய்வாம்
பயமென்ப சுதை நீர் அச்சம் பாலொடு பயன் பேரைந்தே
அயனமே வழியினாமம் ஆண்டினற் பாதியின்பேர்.

155.  பயி ரோலி பயிலே பைங்கூழ் பறக்கும் புட்குரலின்நாற்பேர்
கயினியே அத்தநாளுங் கைம்மையும் யிருபேர் காட்டும்
வயிரமே செற்றங் கூர்மை வச்சிரம் ஓர்மணியே சேகு
கயில் பிடர்த்தலையே பூணின் கடைப்புணர் இருபேர்தானே.

156.  ஐயமே பிச்சையேற்குமோ டனுமானம் பிச்சை
ஐயனே மூத்தோன் சாத்தன் அப்ப னீச்சுர னார்பேரே
தொய்யலே யுழவுஞ் சேறும் துயருமும் மகிழ்சியும்பேர்
மொய் செருக்களம் போர் யானை மூசல் வண்டொடு திரட்பேர்.

157.  வயவனே வீரனோடு வலியான் காதலனு மாகும்
குயிறலே செறிதல் கூவல் குடைதல் பண்ணுத னார்பேரே
வய னிட முதரம் வீடாம் வயாக் கரு வருத்தங் காதல்
மயல் செத்தை மயக்கம் பேயாம் மறவரே வயவர் வேடர்.

158.  குயிலே கோகிலமுஞ் சொல்லும் கொண்டலுந் துளையு நாற்பேர்
வயமாவே குதிரை சிங்கம் மதகரி புலியு மாகும்
வியலென்ப விசாலம் பீடாம் வேய்துளை வெற்று மூங்கில்
மயிலையே மீனராசி மீ னிருவாட்சி முப்பேர்.

159.  சயிந்தவங் குதிரையோடு தலையு மிந்துப்பு மாகும்
குயந்தனம் இளமையோடு கூரரிவாளு முப்பேர்
நயந்தோன் நண்பன் கொண்கன் நலம் விருச்சிகமே நன்மை
பயம்பென்ப தானைவீழும்படுகுழி பள்ளமாமே.

160.  இயல்நடைதமிழ் சாயற்பேர் ஏல்வையே பொழுது வாவி
குய்யென்ப கறிகரித்தல் குளிர்நறும்புகை யிரண்டாம்
செயிரென்ப சினங் குற்றப்பேர் சேடி விஞ்சையரூர் பாங்கி
உயவை காக்கணமே முல்லையுற்ற கான்யாறுமாமே.

161.  செய்யலே ஒழக்கங்காவல் சேறு செய்வினை நாற்பேரே
நெய்தலே கடற்சார்பூமி நெய்தற்பூச் சாபறைபேர்
வெய்யோன் ஆதவனே தீயோன் வருப்பினன் றனக்கு மப்பேர்
ஐயையே யுமையாள் துர்கை மக ளருந்தவப் பெண் ணாசாள்.

162.  ஐ யழ கிடைச்சொல் கோழை யரசனோ டிருமல் சாமி
மையென்ப தஞ்சனங் கார் மல டிருள் ஆடு மாசாம்
கையிடம் படையுறுப் பொப்பனை செங்கை சிறுமை சீலம்
வையந் தே ரே றுரோணி வசுந்தரை சிவிகை யூர்தி.

163.  சேய் குகன் இளமை தூரஞ் செம்மை றனசண் சிறுமை செவ்வாய்
வாய் குழ லிடம் வாய்மைப்பேர் மாருதி யனுமன் வீமன்
ஆய்தலே நுணுக்கந் தேர்தல் ஆறென்ப வழி நதிப் பேர்
வேய்தல் சூடுதல் மூடற்பேர் விநாயகன் அருகன் முன்னோன்.

164.  அயிர் தேங்கட்டி யான்ற நுண்மணலே நுண்மை
செயல் தொழி லொழுக்க மென்ப தெய்வமே கடவு ளூழாம்
நயமென்ப மகிழ்ச்சி யின்பம் நன்மை நற்பயன் நாற்பேரே.
பெயரென்ப பெருமை கீர்த்தி பேசு நாமப் பேராமே.


« மகரயெதுகை 
ரகரயெதுகை » 


Meta Information:
யகரயெதுகை, சூடாமணி நிகண்டு ,இலக்கணம், soodamani nigandu,மண்டல புருடர்,Tamil tutorial