குதம்பைச் சித்தர்
TAGS:
pambatti Couplet,குதம்பைச் சித்தர் பாடல்,சித்தர் பாடல்கள்,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,kudambai padalgal in tamil lyrics,devotional songs,Poet kudambai siddharவேள்வியில் ஆட்டினை வேவச்செய்து உண்போர்க்கு
மீள்வழி இல்லையடி குதம்பாய்
மீள்வழி இல்லையடி.


வேதம் புராணம் விளங்கிய சாத்திரம்
போதனை ஆகுமடி குதம்பாய்
போதனை ஆகுமடி.


யாகாதி கன்மங்கள் யாவும் சடங்குகள்
ஆகாத செய்கையடி குதம்பாய்
ஆகாத செய்கையடி.


சாற்றும் சகுணங்கள் சந்தியா வந்தனம்
போற்றும் அறிவீனமே குதம்பாய்
போற்றும் அறிவீனமே.


ஆனதோர் நாள் என்றல் ஆகாத நாள் என்றல்
ஞானம்இல் லாமையடி குதம்பாய்
ஞானம்இல் லாமையடி.


அஞ்சனம் என்றது தறியாமல் ஏய்க்குதல்
வஞ்சனை ஆகுமடி குதம்பாய்
வஞ்சனை ஆகுமடி.


மாய வித்தை பல மாநிலத்தில் செய்கை
தீய தொழி லாமடி குதம்பாய்
தீய தொழி லாமடி.


கருவை அழித்துக் கன் மத்தொழில் செய்குதல்
திருவை அழிக்குமடி குதம்பாய்
திருவை அழிக்குமடி.


மாரணஞ் செய்துபல் மாந்தரைக் கொல்வது
சூரணம் ஆக்குமடி குதம்பாய்
சூரணம் ஆக்குமடி.


பொய்யான சோதிடர் பொய்மொழி யாவுமே
வெய்ய மயக்கமடி குதம்பாய்
வெய்ய மயக்கமடி.


மெய்க்குறி கண்டு விளங்க அறியார்க்குப்
பொய்க்குறி யேதுக்கடி குதம்பாய்
பொய்க்குறி யேதுக்கடி.


நாயாட்ட மாய் நகைத்துழல் மூடர்க்குப்
பேயாட்ட மேதுக்கடி குதம்பாய்
பேயாட்ட மேதுக்கடி.


மந்திர மூலம் வகுத்தறி யாதார்க்குத்
தந்திரம் ஏதுக்கடி குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி.


வாதமென்றே பொய்யை வாயிற் புடைப்போர்க்குச்
சேதம் மிகவருமே குதம்பாய்
வேதம் மிகவருமே.


வெட்ட வெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்கு
பட்டய மேதுக்கடி குதம்பாய்
பட்டய மேதுக்கடி.


மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞ்ஞானிக்கு
கற்பங்க ளேதுக்கடி குதம்பாய்
கற்பங்க ளேதுக்கடி.


காணாமற் கண்டு கருத்தோ டிருப்பார்க்கு
வீணாசை யேதுக்கடி குதம்பாய்
வீணாசை யேதுக்கடி.


வஞ்சக மற்று வழிதனைக் கண்டோர்க்கு
சஞ்சல மேதுக்கடி குதம்பாய்
சஞ்சல மேதுக்கடி.


ஆதார மான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்ட மேதுக்கடி குதம்பாய்
வாதாட்ட மேதுக்கடி.


நித்திரை கெட்டு நினைவோ டிருப்போர்க்கு
முத்திரை யேதுக்கடி குதம்பாய்
முத்திரை யேதுக்கடி.


தந்திர மான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திர மேதுக்கடி குதம்பாய்
மந்திர மேதுக்கடி.


சத்தியமான தவத்தி லிருப்போர்க்கு
உத்திய மேதுக்கடி குதம்பாய்
உத்திய மேதுக்கடி.


நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்க ளேதுக்கடி குதம்பாய்
வாட்டங்க ளேதுக்கடி.


முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்கு
சத்தங்க ளேதுக்கடி குதம்பாய்
சத்தங்க ளேதுக்கடி.


உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோருக்கு
இச்சிப்பிங் கேதுக்கடி குதம்பாய்
இச்சிப்பிங் கேதுக்கடி.


வேகாமல் வெந்து வெளியொளி கண்டோர்க்கு
மோகாந்த மேதுக்கடி குதம்பாய்
மோகாந்த மேதுக்கடி.


சாகாமற் றாண்டி தனிவழி போவார்க்கு
ஏகாந்த மேதுக்கடி குதம்பாய்
ஏகாந்த மேதுக்கடி.


அந்தரந் தன்னி லசைந்தாடு முத்தர்க்குத்
தந்திர மேதுக்கடி குதம்பாய்
தந்திர மேதுக்கடி.


ஆனந்தம் பொங்கி அறிவோ டிருப்போர்க்கு
ஞானந்தா னேதுக்கடி குதம்பாய்
ஞானந்தா னேதுக்கடி.


சித்திரக் கூட்டத்தைத் தினந்தினங் காண்போர்க்குப்
பத்திர மேதுக்கடி குதம்பாய்
பத்திர மேதுக்கடி.


முக்கோணந் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்
சட்கோண மேதுக்கடி குதம்பாய்
சட்கோண மேதுக்கடி.


அட்டதிக் கெல்லால் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டணை யேதுக்கடி குதம்பாய்
நட்டணை யேதுக்கடி.


முத்திபெற் றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
பத்திய மேதுக்கடி குதம்பாய்
பத்திய மேதுக்கடி.


அல்லலை நீக்கி அறிவோ டிருப்பார்க்குப்
பல்லாக் கேதுக்கடி குதம்பாய்
பல்லாக் கேதுக்கடி.


அட்டாங்கயோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்க மேதுக்கடி குதம்பாய்
முட்டாங்க மேதுக்கடி.


வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
யோகந்தா னேதுக்கடி குதம்பாய்
யோகந்தா னேதுக்கடி.


மாத்தானை வென்று மலைமே லிருப்போர்க்குப்
பூத்தான மேதுக்கடி குதம்பாய்
பூத்தான மேதுக்கடி.


செத்தாமரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்குக்
கைத்தாள மேதுக்கடி குதம்பாய்
கைத்தாள மேதுக்கடி.


கண்டாரை நோக்கிக் கருத்தோ டிருப்போர்க்குக்
கொண்டாட்ட மேதுக்கடி குதம்பாய்
கொண்டாட்ட மேதுக்கடி.


காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்க ளேதுக்கடி குதம்பாய்
கோலங்க ளேதுக்கடி.


வெண்காய முண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காய மேதுக்கடி குதம்பாய்
உண்காய மேதுக்கடி.


மாங்காய்ப்பா லுண்டு மலைமே லிருப்போர்க்குத்
தேங்காய்ப்பா லேதுக்கடி குதம்பாய்
தேங்காய்ப்பா லேதுக்கடி.


பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவார்க்கு
முட்டாக் கேதுக்கடி குதம்பாய்
முட்டாக் கேதுக்கடி.


தாவார மில்லை தனக்கொரு வீடில்லை
தேவார மேதுக்கடி குதம்பாய்
தேவார மேதுக்கடி.


தன்னை யறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்கு
பின்னாசை யேதுக்கடி குதம்பாய்
பின்னாசை யேதுக்கடி.


பத்தாவுந் தானும் பதியோ டிருப்போர்க்கு
உத்தார மேதுக்கடி குதம்பாய்
உத்தார மேதுக்கடி.