காகபுசுண்டர் குறள்

சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்
நன்மை பராபரத்தை நாடு


அண்ட முடிமீதி லங்கிர விமதியைக்
கண்டுதரி சித்தல் கதி.


வலமிடமாய் நின்ற மதிரவியை மாறி
விலகா தடியினிற்பின் வீடு.


அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்.


உலகமே மாயமென வுன்மனதிற் கண்டு
நலமாக நாதனடி நம்பு


சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்.


சொன்னே னறிந்து சுகமா யுலகோருக்
கெந்நாளும் வாழ்கவென்றே யான்.


கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான்
மண் முதிர்பதயு மாறு.


விண்டனே ஞானம் வெளியாக முப்பத்தி
ரண்டி லறிவீர் நலம்.


நேத்திரத்தைக் காகம்போல் நிச்சய மாய்நிற்க
ஆத்துமத்தி லானந்த மாம்.


உலகி லறிந்தோ ரொருநாளும் மாளார்
பல நினைவை விட்டுநீ பார்.


கண்டோருஞ் சொல்லார் கருத்தாற் பெரியோரைத்
தொண்டுசெய்து பெற்ற சுகம்.


ஆதியிற் சொன்னவிய ரண்ட மதையெடுத்து
மாதுசிவன் பூசைசெய்து வை.


முப்பொருளைச் சுட்டு முழுதழுது நீறாக்கித்
தப்பாம லுண்டுநிலை சார்.


யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
வேகமுடன் கண்டுணரு வீர்.


வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில்
மோசம்வா ராகுறள்முற் றும்.


Meta Information:
காகபுசுண்டர் குறள், kaagapujendar Couplet,காகபுசுண்டர் பாடல்,சித்தர் பாடல்கள்,உபநிடதம் - 31,காவியம் 33,Siddhar Couplet,Tamil Tutorial,Siddhar Songs,Tamil Songs,kaagapujendar padalgal in tamil lyrics,devotional songs,Poet kaagapujendar