சாதி

நம் நாட்டில் சாதி என்ற சொல் அவசியமான ஒன்று என்று நம்பப்படுகிறது. குறிப்பிட்ட காலத்துக்கு முன் ஞானத்தையும் கல்வியையும் எந்த மக்கள் வைத்துள்ளார்களோ அவர்கள் உயர்ந்த சாதியாகவும், பெரும்பான்மையான நிலத்தை யார் ஆட்சி செய்கிறார்களோ, பொருள் உற்பத்தி செய்கிறவர்கள் அடுத்த உயர்ந்த சாதியாகவும், அடுத்து நிலத்தில் உற்பத்தி ஆகும் பொருளை வியாபாரம் செய்பவர்களுக்கு அடுத்த சாதியாகவும், நிலம் இல்லாமல் கூலி வேலை செய்கிறவர்கள் அடுத்த கட்ட சாதியாகவும், துணி துவைப்பவர்கள், சவரம் செய்பவர்கள், செருப்பு தைப்பவர்கள் அடுத்த சாதியாகவும், பிணத்தின் மூலம் தொழில் செய்வது அடுத்த கட்ட சாதியாகவும் கருதபட்டது.

இப்படி சாதி உருவாக காரணம் முதல் தொழில். வாழ்க்கைக்கு தேவையான தொழிலில்ருந்து தான் சாதி உருவாகிறது. அப்படி பட்ட ஒன்றை கூட்டமாக சேர்ந்து செய்யும் பொழுது தனி பிரிவு மக்களாக அல்லது சமுகமாக உருவாகிறது. ஒவ்வொரு தொழிலுக்கும் இரகசியம் அல்லது யுக்தி முறை நிச்சயம் இருக்கும். அந்த தொழிலை குறிப்பிட்ட மக்கள் அல்லது சமுக பிரிவு செய்யும் பொழுது தொழிலுக்கு தேவையான கருவிகள், சிந்தனைகள் தொழில் செய்யும் மக்களிடம் வசப்படுகிறது. இதனால் அந்த குறிப்பிடப்பட்ட சமுக மக்கள் தேர்ந்தெடுக்கபட்ட தொழிலில் சிறப்பாக செய்ய இயலும். ஒவ்வொரு முறையும் மக்கள் தேவையை அந்த சமுக மக்கள் சிறப்பாக செய்யும் பொழுது அந்த சமுகம் பிரபலமடைந்து வர்த்தகமாக உருவாகிறது. வர்த்தகத்துக்கு குறியீடு வைத்துவிட்டால் அதை சொல்லும்பொழுது கேட்டுக்கொண்டே இருப்பதால் காலம் காலமாக அது நிலைத்து நிற்க்கிறது. நாளடைவில் எந்த சமுக பிரிவினர் சுகமாகவும் பணம் அதிகமாக வருகிறதோ அந்த சமுகம் உயர்ந்த சமுக குறியீடாக வளர மற்ற சமுகம் தாழ்ந்த சமுக குறியீடாக வளருகிறது.

இந்த வாழ்க்கை முறையை தன்னை சார்ந்த குடும்பத்திற்க்கும், பிள்ளைகளுக்கும் எடுத்து செல்லும் பொழுதும் மற்றும் இந்த தொழிலை மற்ற குடும்பத்திற்க்கு கற்று கொடுக்காமலும், சமுகம் தாண்டி சிந்திக்க விடாமல் செய்வதாலும் தனி அடையாளம் அந்த சமுகத்திற்க்கு நிரந்திமாக வருகிறது. இதனால் விவசாயம் செய்கிறவன் அவன் பிள்ளைகளும் விவசாயம் செய்கிறார்கள், வியபாரம் செய்கிறவர்கள் அவர்கள் பிள்ளைகளும் வியபாரம் செய்கிறார்கள், துணி துவைப்பவர்கள், சவரம் செய்பவர்கள், செருப்பு தைப்பவர்கள், பிணத்தின் மூலம் தொழில் செய்பவர்கள் அவர்கள் பிள்ளைகளும் அதே செய்கிறார்கள்.

ஒவ்வொரு சமுகத்திற்க்கான அடையாளமாக சின்னம், பாட்டு, பழமொழி, இசை, நாடகம், கதை, புத்தக ஏடு வடிவமைத்து தேவைபடும்பொழுது மக்களுக்கு எடுத்து சொன்னால் அவ்வளவு தான், மனிதனின் மனம் நிரந்தரமாக நம்பும் அளவுக்கு வேளை செய்யும். ஏனென்றால் சாதாரன நிலைகளை விட உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மனம் பதிவுகளை அதிகம் உள்வாங்கும். இதிலிருந்து வெளியே வர மனிதனுக்கு பல விதமான அறிவு நுனுக்கங்கள் தேவைபடும். இதன் காரனமாக அந்த குறியீட்டை கேட்டாலே உன்மை அது நிரந்தரமான ஒன்று என்றும் பிறக்கும் பொழுதே அது நிர்நயம் செய்யப்பட்டது என்று மனம் நம்பும். இது மாதிரியான அழுக்குகளை துடைப்பது என்பது அவ்வளவு எளிதில் முடியாது. ஆனால் அழுக்குகளை வேரொடு சாய்க்க முடியும் என்பதும் சாத்தியமே. காலம் எடுக்கும் அவ்வளவு தான்.

பல வருடங்களாக இந்த சாதி அமைப்புகள் நடைமுறையில் உள்ளதால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உயர்ந்தவன் தாழ்தவன் என்ற சிந்தனை இருக்கும். அதுவுமில்லாமல் உயர்ந்த சாதி மக்கள் தாழ்ந்த சாதி மக்களை வீட்டீல் அனுமதி தர முன்வருவது இல்லை, கல்யாணத்திற்க்கு பெண் கொடுப்பதும் எடுப்பதும் செய்வதில்லை, தாழ்ந்த சாதி மக்களை தொடக்கூடாது போன்ற வாசகம் சாதி பாகுபாடு மக்களிடம் தூண்டிக்கொண்டே இருக்கிறது. உயர்ந்த சாதி மக்கள் இருக்கும் பகுதியில் தாழ்ந்த சமுக மக்கள் செருப்பை கையில் எடுத்து செல்லும் அளவுக்கு சாதி பேதமைகளை உருவாக்கி வைத்துள்ளனர். கை கட்டி நிற்க வேண்டும், வேட்டியை மடித்து கட்ட கூடாது, பெண்கள் மேலாடை அணியக்கூடாது, கோயிலுக்குள் அனுமதி மறுப்பு, உயர்ந்த சமுக மக்கள் வாழும் பகுதியில் நடமாடகூடாது போன்ற பேதமைகளினால் கீழ்சாதி மக்கள் மிகவும் அல்லல் படுகின்றனர். இன்று பெரும்பாலும் பாதி கட்டமைப்புகள் தகர்த்துவிட்டது. மீண்டும் உருவாக வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. சரியான சட்டத்தை நடைமுறை செய்து சாதி அமைப்புகளின் வெறிச்செயலை முழுவதுமாக தகர்த்தெரிய வேண்டும்.

முன்பொரு காலத்தில் நாட்டை ஆள்வதற்க்கு போர் நிகழ்ந்திருக்கலாம், இதனால் பல விதமான வேலை அமைப்புகள் உருவாக்கபட்டிருக்கும். போரில் மரணம் ஏற்பட்டால் அவர்களை தூக்கி செல்வதற்க்கு குறிப்பிட்ட மனிதர்களை வேலைக்கு அமர்த்தபட்டிருக்கலாம். இக்காலத்தில் உள்ளது போல் கழிப்பறை வசதிகள் இருந்திருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. நகரத்தில் கூட்டமாக வாழும் பொழுது கழிவுகளை சுத்தம் செய்வதற்க்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தபட்டிருக்கலாம். தொடர்ந்து பிணத்திற்க்கு மத்தாலம் தட்டுவதும், கழிவுகள் சுத்தம் செய்யும் வேலை இருப்பதால் அவர்களை தொடமுடியாத நிலை இருந்திருக்கலாம். வீட்டில் உள்ளவர்களையே கருமாதிக்கு சென்றாலோ, முடி திருத்தம் செய்திருந்தாலோ, உடலும், மனமும் அசுத்தமாக இருந்தாலோ வீட்டில் அனுமதி மறுக்கபடுகிறது. அவர்களை குளித்துவிட்டோ அல்லது கால்கழிவி விட்ட பிறகு தான் அனுமதி தருகிறார்கள். அப்பொழுது எப்போதும் அசுத்தமாக இருப்பவர்களை தொட கூடாது என்றும் வீட்டீலோ, கோயிலிலோ அனுமதி தர தற்காலிகமாக முடிவெடுத்திருக்கலாம். அதுவே நிரந்தரமான தொழில் என்றால் வேறு வழி இல்லை, அவர்களை வீட்டீல் அனுமதி தர முடியாது. இதுவே காலம் காலமாக ஒரு குடும்பத்தினர் அல்லது சமுக மக்கள் நடைமுறை செய்யும் பொழுது அவர்களை வீட்டீலோ அல்லது கோயிலிலோ அனுமதி தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். அதனால் இது போன்ற தொழிலை தன் பிள்ளைகள் எக்காரணத்தை கொண்டும் கையாளகூடாது என்றும், இது போன்ற தொழிலில் நிரந்தரமாக ஒருவரை அமர்த்தகூடாது என்பதை போன்ற சட்டம் இயற்றபட வேண்டும். இது போன்ற தொழிலில் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்திற்க்கு மேல் அமர்த்த கூடாது. அப்படி அமர்த்தினால் மீண்டும் சாதி கொடுமைகள் நடக்க வாய்ப்பு அதிகம்.ஒரு வேளை இப்படிபட்ட தொழிலை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தால் கடவுளை பற்றி அறிவு வளர்த்த பின் ஈடுபடுவது மிகவும் நல்லது.

ஏன் கீழ் சாதி மக்களை கோயில்லுக்கு செல்லக்கூடாது? மேல் சாதி மக்கள் தான் செல்ல வேண்டும். ஏன் பிராமணன் என்று சாதி மக்கள் மட்டும் பூஜை செய்கிறார்கள் நாம் செய்யக்கூடாதா! நாம் எந்த சாதி அப்படின்னு கேள்வி எழ வேண்டும். இப்ப கோயிலில் பூஜை செய்யும் பிராமணன் அல்லது பிராமணக்குலம் என்பது ஏட்டு சுரைக்காய் போன்றது. உன்மையான பிராமணனுக்கு வெகு தூரம் உள்ளது.

வர்னம்( சாதி ) நான்கு வகை. சூத்திரன், வைஷ்னவன், சத்திரியன் மற்றும் பிராமணன்.

சமூகத்திற்க்கு தேவையான சேவைகளை உடல் உழைப்பு மூலமாக அளிக்கக் கூடியவர்கள் சூத்திரர்கள். விவசாயம், வியாபாரம், வர்த்தகம், தொழில் மூலம் சேவை செய்பவர்கள் வைசியவர்கள். நிர்வாகம், பாதுகாக்கும் திறமையுடைவர்கள் சத்ரியர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடுடையவர்கள், ஆன்மீகத்தை பயிற்றுவிப்பவர்கள் பிராமணர்கள். இந்த சாதியை மனித உடலுடன் ஒப்பிடும் போது மல ஜலம் போன்ற கழிவுகளை உடலிலிருந்து வேளியேற்றுவது சூத்திரனின் வேலை. பகுதி அடிவயிறு. உடல் உறுப்பிற்க்கு உணவின் மூலம் சக்தி கொடுப்பது வைஷ்னவனின் வேலை, பகுது வயிறு. உடல் உறுப்புகளில் கிருமி தொற்று, கழிவு தடைபடுதல் போன்ற பிரச்சனை எங்கு நடந்தாலும் சண்டையிட்டு பாதுகாக்கப்படுபவன் சத்ரியனின், நெஞ்சுப்பகுதி. எல்லா உறுப்புகளும் சமிக்கஞைகளை அனுப்பி சரியா இருக்கிறதா என்று பார்க்கும் பொறுப்பு பிராமனனின் வேலை, பகுதி தலை. பிறக்கும் பொழுது எல்லோரும் அடிவயிற்றுப்பகுதியிலிருந்து தான் பிறக்கிறார்கள் அப்படி பார்த்தால் எல்லோரும் சூத்திரர்கள் தான். அடிவயிற்றுப்பகுதியில் பிறக்காமல் தலையில் பிறந்தால் கூட பிராமணர்கள் என்று ஒத்துகொள்ளலாம், ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்பில்லை. பிறக்கும் போது அடிவயிறு நெஞ்சுப்பகுதியோ அல்லது தலைப்பகுதியோ மாறிடாது என்ற அடிப்படையில் பார்த்தால் சூத்திரன் கடைசி வரைக்கும் சூத்திரனாகவே இருப்பான் என்ற பொருள் கொள்ளக்கூடாது. அறிவு விரிவு பெறுப்பொழுது சாதி நிலை மாறும்.

பிராமணன் கடவுளை கண்டவன். அவன் தினமும் பூஜை செய்வான். செய்யத்தெரியும். மற்ற வகுப்புகள் கடவுளை காணும் வழியில் உள்ளனர். ஒரு ஆழமான கினற்றில் நாம் உள்ளோம். கயிறு ஒன்று உள்ளது. கீழிருக்கும் நிலையில் நாம் சூத்திரன். கொஞ்சம் மேலே வந்தால் நாம் வைஷ்னவன். பாதி வழியை தாண்டி விட்டால் நாம் சத்ரியன். மேலே கடவுளை கண்டு விட்டால் நாம் பிராமனன். பிராமனன் நிலையிலிருந்து நாம் கீழேயும் செல்ல முடியும். தேவையில்லாத சிந்தனை நம்மை ஆட்கொண்டால் நாம் தானாக கீழே இறங்கி விடுவோம். அப்படி மேலே சென்று கீழே வந்தவனுக்கு மேலே செல்ல வழி தெரியும்.

இப்ப தெரிகிறதா ஏன் கீழ் சாதி மக்கள் கடவுளை வணங்ககூடாது என்று. கடவுளை வணங்ககூடாது என்று இல்லை கடவுளை வணங்கமுடியாது. கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்று வழி தெரியாதவன் அல்லது அனுபவம் இல்லாதவன் என்று பொருள். தினமும் பிரசித்திபெற்ற கோயில்ல பூஜை செய்யும் ஐயன் நான் எனக்கே வழி தெரியாதா! உன்னை பற்றி தெரியவில்லை என்றால் சூத்திரன் என்று பொருள். உலகத்தில் எவ்வளவு பெரிய கோயில், சர்ச், ஆலயம், மசுதி எங்கெ பூஜை செய்தாலும் இது தான் அர்த்தம்.

கடவுளை வணங்க கூடாது என்பதற்க்கும் கடவுளை வணங்கமுடியாது என்பதற்க்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளது என்று யோசனை செய்யுங்கள். இப்படி தான் மக்களை முட்டாளாக மாற்றி வைத்துள்ளனர். இப்ப இருக்கும் சமுகத்தில் எவ்வளவு பெரிய இடத்தில் அல்லது பதவியில் இருந்தாலும் வழி சுத்தமாக தெரியவில்லை என்றால் சூத்திரன் என்ற சாதி அமைப்புக்கே வரவில்லை என்று பொருள்.

கடவுளை தேடிப்போகும் வழியில் உடலுறவு ஏற்பட்டு குழந்தை பிறந்தால் அது கீழ் சாதியுமில்லை. அது ஒரு மிருகம் அவ்வளவு தான். சூத்திரனுக்கு கயிறு ஒன்று உள்ளது என்று தெரியும் ஆனால் குழந்தைக்கு அது கூட தெரியாது. நீ இருக்கும் நிலையில்( சாதியில் ) ஒரு குழந்தை பிறந்தால் அந்த சாதி என்று கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது.பிராமண நிலை என்பது மனமற்ற நிலை அங்கெ எப்படி இரண்டு மனம் இயங்கும்? சூத்திரன் நிலைக்கும் கீழ் நிலையில் தான் இரண்டு மனம் சேரும். உடலுறவு சமயத்தில் கடவுளை வழிபட இயலுமா? எப்படி அவர்களுக்கு பிறந்த குழந்தை பிராமனன், சத்ரியன், வைஷ்னவன் என்று பிரிக்க இயலும்? இந்த ஜென்மத்தில் சூத்திரனாக பிறந்து விட்டோம் அடுத்த ஜென்மத்தில் பிராமனனாக பிறக்கலாம் என்று கணவு கானாதே. ஒரே ஜென்மத்தில் முயற்சி செய்தால் சூத்திரன் நிலையில் இருந்து பிராமன நிலைக்கு செல்ல முடியும். சாதி அமைப்பு என்பது மாறகூடிய நிலை.

இந்த வர்ணப்பிரிவை ஒரு உயர்ந்த வகுப்பை சேர்ந்தவன் ( குருவால் ) பிரிக்க இயலுமா அல்லது இயலாதா என்ற கேள்வி எழுகிறது . இந்த சாதி என்பது தேவையில்லாத ஒரு மாயை என்று தான் தோன்றுகிறது. இப்படி பட்ட விஷயங்களை யோசனை செய்தால் தேவையில்லாத சாதி கொடுமைகளை தடுக்கலாம்.

இன்று பொருளாதரத்தில் உயர்ந்துள்ள சமயத்தில் யாரிடம் அறிவும் உழைப்பும் இருக்கிறதோ அவனிடம் பணம் புழக்கம் அதிகமாக உள்ளது. பணம் வைத்தவர் சாதி மதத்தை கடந்து நிற்கிறார். அந்த சாதியில் அவன் அதிகமாக பணம் வைத்துள்ளான் என்பது தான். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையிலே சாதியை பற்றி யோசித்து முடிவு எடுக்க வேண்டிய தேவை உள்ளது. ஒரு 20 – 30 வருடங்களில் இப்பொழுது இருக்கும் வசதி வாய்ப்பு பின்பு இருக்காது. ஒரு மனிதன் மற்ற மனிதனை அடித்து சாப்பிடும் அளவுக்கு மிருகத்தை விட மோசமான சூழ்நிலை வருவது போல ஒரு எண்ணம் தோன்றுகிறது. இன்று இருக்கும் நிலமையிலே சாதியை பற்றி பிரச்சனைக்கு முடிவு எடுக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

ஒரு மனிதனுக்கு என்ன தேவை? உணவு மிக முக்கியம். தங்கும் இடம் அடுத்த தேவை. போதுமான உடை அடுத்த தேவை. தேவையான கல்வியும், களவியும் அவசியம். சாதி என்பது ஒத்த வாழ்வை கொண்ட ஒரு கூட்டமான மக்களை குறிக்கிறது. ஒரு சாதிக்குள் இருக்கும் மக்களுக்கு உணவும் களவியும் மிக முக்கியம். இது இரண்டும் இல்லை என்றால் அந்த சாதி நிலைக்காது.

மலேசியா போன்று நாடுகளில் இருக்கும் சட்டங்கள் போன்று சொந்தங்களுக்குள் கல்யாணம் செய்ய கூடாது என்றும், ஒருவர் ஒரு கல்யானுத்துக்கு மேல் செய்ய கூடாது என்றும் சட்டம் வந்தால் சாதி மதம் உடைந்து விடும். கல்யாணம் செய்யும் ஆண் பெண் இருவரும் ஒரு ஐந்து தலைமுறைக்கு உறவுகள் ஏதும் இருக்க கூடாது என்று வந்து விட்டால் வேறு வழி இல்லாமல் குறிப்பிட்ட தலைமுறைக்கு பிறகு காமப்பசிக்கு வேறு சாதியை தான் திருமணம் செய்ய முயற்ச்சி செய்வார்கள். அங்கு நிலம்/சொத்து தன் கையில் இருந்து இரண்டு மூன்று தலைமுறையில் பிரிந்து விடும். நிலம் அரசாங்கம் கட்டுபாட்டில் வந்துவிடும். உறவுகளுக்குள் கல்யாணம் செய்தால் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இது போன்ற சட்டம் வேறு வழியே இல்லை என்றால் நடைமுறைப்படுத்தலாம்.

புது வீடு கட்டுகிறோம் என்றால் பல சாதி மக்கள் வந்து வீடு கட்டுவதற்க்கு உதவுவார்கள். வீடு கட்டி முடிந்து விட்டால் வீட்டுக்கு கண்டவன் போனவன் எல்லாம் வந்து விட்டதால், வீட்டுக்கு லட்சுமி பூஜை செய்தால் பணம் வரும் என்று பிராமனனை கூட்டி வந்து பூஜை செய்வார்கள். அந்த பிராமணன் என்னமோ புனிதமானவன் போல் நாம் எல்லாம் புனிதமற்றவர்கள் போல் நினைக்கிற நினைப்பை தகர்த்தெறிய வேண்டும். அந்த குலத்தை இல்லாமல் ஆக்கி விட்டால் ஓரளவுக்கு சாதி உடைந்து விடும். நாங்களும் பிராமணன் என்ற சாதி அமைப்பை கொண்ட மக்களை மதிக்க வேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனால் அவர்கள் அவர்களை மதிக்கவில்லை ஆகையால் அவனை மதிக்க வேண்டிய அவசியமில்லை. எப்பொழுது தன்னுடைய உயிரை எவர் மதிக்கிறாரோ அவர் அடுத்த உயிரை மதிக்க விரும்புகிறார் என்று அர்த்தம்.

அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் ஒருவன் பிராமணன் தான் என்று நிருபணம் செய்ய வேண்டும். பிராமணர்களும் சத்ரியர்களும் போரில் வெற்றி பெறாமல் திரும்ப மாட்டார்கள். புற முதுகு காட்ட மாட்டார்கள். அப்படி காட்டினால் அவர்கள் சூத்திரனாக மாற்றி விட வேண்டும். ஒரு பொது இடத்தில் ஒரு பதினெட்டு நாட்கள் பாரத போர் போன்று அமர வைத்து சாப்பிடாமல் செய்து பிராமணன் தான் என்று நிருபணம் செய்து விட்டால் அந்த வருடத்தின் உழைக்காமல் சாப்பாடு அவனுக்கு அரசாங்கம் ஏற்க்கும் என்று அரசாங்கம் அறிவித்து விட்டால் மிக சுலபமாக பிராமணன் என்று பொய் சொல்லும் குலத்தை ஒழித்து விடலாம். ஒவ்வொரு வருடமும் இது நடைபெற வேண்டும். யார் வேண்டுமானலும் கலந்து கொள்ளலாம் என்று சட்டம் கொண்டுவந்து விட்டால் பிறகு நல்ல சமுதாயம் நாட்டில் பிறக்க வாய்ப்பு உள்ளது. பதினெட்டு நாட்கள் இல்லை என்றாலும் ஒரு மூன்று நாட்கள் சாப்பிடாமல் தூங்காமல் தவம் செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் யோகா செய்வதற்க்கே பல நாள் பயிற்ச்சி செய்ய வேண்டும். அதுவே மூன்று மணி நேரம் ஆடாமல் அசையாமல் இருக்கைகளில் அமருவது என்பது வைராக்கியம் நிறைந்த ஒருவனால் மட்டுமே முடியும். மூன்று மணி நேரம் ஆடாமல் அசையாமல் குருவை ( ஆள்நிலை தவம் ஒரே இடத்தில் ) நினைவை வைத்திருந்தால் கடவுளை பற்றியும், தன்னை பற்றியும் அறிவு மலர ஆரம்பித்துவிடும். மூன்று நாள் என்றால் யோசித்து பாருங்கள்.

பிராமணன், சத்ரியன், வைஷ்னவன், சூத்திரன் என்ற நாண்கு சாதியை உருவாக்கி மற்ற சாதி அமைப்புகளை தகர்க்க வேண்டும். பிராமனனுக்கு வைக்கும் பயிற்ச்சி நாட்களில் பாதியை சத்ரியனுக்கும், அதிலும் பாதியை வைஷ்னவனுக்கும், அதிலும் பாதியை சூத்திரனுக்கும் வைத்து மக்களை பிரிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்கும் சலுகைகள் கொடுத்து பயிர்ச்சி வகுப்புகளில் ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். பிராமனனுக்கு கொடுக்கபடும் சலுகைகளில் பாதியை சத்ரியனுக்கும், சத்ரியனுக்கு கொடுக்கபடும் சலுகைகளில் பாதியை வைஷ்னவனுக்கும், வஷ்னவனுக்கு கொடுக்க பட வேண்டிய சலுகைகளில் பாதியை சூத்திரனுக்கு கொடுக்க பட வேண்டும். பயிர்ச்சி வகுப்புகளில் சேராதவருக்கும், சூத்திர பயிர்ச்சியிலே வெற்றி பெறாதவருக்கும் சலுகைகலும் கொடுக்க கூடாது அதுவுமில்லாமல் அவர்களுக்கு வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி போட வேண்டும். இதை ஒவ்வொரு வருடமும் நிருபனம் செய்ய வேண்டும். ஒரு வருட முடிந்த பிறகு மீண்டும் பயிற்சி செய்ய வேண்டும். வாழ்வில் ஒரு 40 வருடம் பிராமனனாக இருந்து விட்டால் அடுத்த இருபது வருடத்துக்கு அவன் பிராமணன் என்று பட்டம் கொடுத்து அவனுக்கு சலுகைகள் தர வேண்டும்.

எவன் சத்ரியன் அல்லது பிராமணன் என்ற சாதி அமைப்புக்கு உள்ளார்களோ அவர்கள் மட்டும் தான் கோயிலுக்கு / வீட்டுக்கு பூஜை செய்ய வேண்டும் என்ற சட்டம் வர வேண்டும். எவன் பிராமணனோ அவன் தான் பெரிய பதவி வகிக்க வேண்டும். யோசிக்கும் விசயங்களில் சத்ரியன் அல்லது பிராமனன் தான் வழி நடத்த வேண்டும். இப்படி செய்யும் பொழுது ஒரு மனிதனுக்குள் ஞானம் பிறந்து சாதி அமைப்புகளின் சிக்கலிலிருந்து விடுவித்திடலாம்.

ஒவ்வொரு வேலையின் பதவிக்கும் இருக்கிற சாதி பெயரை பிரித்து வைத்து விட வேண்டும். போகிற போக்கில் ஒரு பத்து வருடங்களில் சாதியும் பதவியும் ஒன்று தான் என்று மக்கள் மனதில் ஆழமான பதிவு செய்திடல் வேண்டும். பதவி எப்படி மாறுகிறதோ அப்படி சாதியும் மாறும். இந்த கருத்தை நடைமுறை செய்யும் பொழுது மிகுந்த யோசனை செய்த பிறகே நடைமுறை செய்ய வேண்டும். தீவீரமான யோகா பயிர்ச்சியின் மூலம் ஒருவரின் விருப்பு வெறுப்பை தகர்த்துவிட்டால் அவர்களாகவே சாதி, மதத்தை விட்டுவிடுவார்கள். யோகா பயிற்சியை தவிர எந்த வழியும் இந்த சாதி மதத்தை தகர்க்க முடியாது என்று தெளிவாக சொல்லிவிட முடியும்.

எதிலும் ஆடம்பரம் இருக்க கூடாது. எப்பொழுது ஆடம்பரம் வருகிறதோ ஒரு மனிதனுக்கும் மற்ற மனிதனுக்கும் வேறுபாடு வருகிறது. தானும் அப்படி ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படுகிறது. இப்படி பட்ட கருத்து ஒருவரின் விடுதலையை கெடுக்கிறதல்லவா? இன்று இருக்கும் சூழ்நிலையில் ஆடம்பரத்தை ஊக்குவித்தால் இயற்கை மிக வேகமாக அழிந்துவிடும். ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதனால் ஆடம்பரத்தை முடக்கினால் சாதி கொடுமைகள் முடிவுக்கு கொண்டுவரப்படும். நாண்கு வர்ன பயிற்ச்சியை மேற்கொண்டாலே தனிமனிதனின் தேவையை அவர்களே குறைத்துக்கொள்வார்கள். மாற்றம் தேவைபடுகிறது. யோசிப்போம். செயல்படுவோம். உயருவோம்.

மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
–சசிகுமார் சின்னராஜு

Share

sasikumar

i am sasikumar graduated as an Electrical and Electronics Engineer. Now i am working as software web developer. Since my college first year onwards my thoughts move towards peace and still i collecting information related to simple and happy living style. Here i share Information related to health, simple life style and yoga.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *