கடவுள் எங்கே

உடலை சுகமாக மாற்றிகொள்ளவும். சரியான முறையில் தண்ணீர் சாப்பிட்டு, சரியான முறையில் உணவு அருந்தி, வயிற்றில் சுத்தமாக வைத்துகொண்டால் மனம் நன்றாக வேலை செய்யும். உடலில் கழிவு தேக்கமிருந்தால் அல்லது வியாதி இருந்தால் கடவுள் வழிபடும் சமையத்தில் எண்ணங்கள் தடுமாறும். உணர்ச்சிகள் மாறும் பொழுது எண்ணங்கள் மாறும். அதனால் முழு கவனத்துடன் கடவுளை வழிபட முடியாது. நேற்று கெட்டு போன உணவை உட்கொண்டு விட்டால் இன்று வயிற்றில் வலி ஏற்படும். அதனால் உடல் சோர்வு ஏற்பட்டு யோகா செய்ய இயலாது.

கடவுளுக்கும் யோகாவுக்கும் என்ன சம்பந்தம்?

எதோ ஒரு கோயிலுக்கு செல்கிறோம். சிலையை கழுவி சுத்தம் செய்து மாலை போட்டு ஊதுபத்தி கொளுத்தி வாழைபழத்தில் வைத்து தேங்காய் உடைத்து பின் கொயில் மணி அடித்துவிட்டு விளக்கு கொழுத்தி வனங்குவோம். வரும்பொழுது பிரசாதம் சாப்பிட்டு சற்று நேரம் அமர்ந்து பின் வீட்டுக்கு வருவோம். இதெல்லாம் பல கோயில்ல ஐய்யிர் அல்லது பிராமணன் என்று சொல்லும் மனித இனம் செய்து கடைசியில் பிராசாதம் கொடுத்தவுடன் சாப்பிட்டு வந்துவிடுவோம். இதெல்லாம் ஏன் செய்கிறோம் என்று கேள்வி எழுந்தால் ஞானம் உதிக்க ஆரம்பம் ஆகிறது என்று அர்த்தம். அந்த கேள்வி கேட்டால் பாவம் என்று சொல்லி கேள்வியின் வேகத்தை குறைத்து விடுவார்கள். விழிப்போடு காலத்தை கடத்துங்கள், சீக்கீறம் கடவுளை வழிபட்டுவிடலாம். கண் இருந்தும் பார்க்காத குருடனாக, காதிருந்தும் கேளாத செவிடனாக காலத்தை கடக்க வேண்டாம்.

இத்தனை நாட்கள் போனுமே ஏதேனும் கடவுள் காட்சி தந்தாரா? நம் குறைகளைத்தான் நிவர்த்தி செய்தாரா? என்ற கேள்வி உதிக்கவில்லையா? எதற்க்கு ஊதுபத்தி, கற்புரம், தேங்காய், வாழைபழம், விளக்கு, கோயில் மணி, பிரசாதம் என்ற கேள்வி உதிக்கவில்லையா? ஏன் பிராமனன் தான் பூஜை செய்யனுமா? சாதரன மனிதர்கள் செய்ய கூடாதா? யாருக்கு இது போன்ற கேள்வி உதிக்கிறதோ அவர்கள் அடுத்த படிக்கு செல்கிறார்கள் என்று அர்த்தம்.

ஊதுபத்தி, கற்புரம், தேங்காய், வாழைபழம், விளக்கு, கோயில் மணி, பிரசாதம், பிராமனன் போன்ற விசயங்கள் வரைபடம் போன்றது. அது உன்மைக்கு வெகுதூரம் உள்ளது. புத்தகத்தில் உள்ள சுரைக்காயை எப்படி சமையல் செய்ய இயலாதோ அது போன்று தான் இதுவும். குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டுமே! அதற்க்கு தான் இந்த வழிமுறை. எல்லோருக்கும் இந்த வழிமுறை இல்லை. வளர வளர கேள்விக்கான பதிலை தேட வேண்டும்.

திருமூலர் பாடல்:

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே

கொங்கணச் சித்தர் பாடல்:

உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி;
அச்சுள்ள விளக்கு வாலையடிஅவி
யாம லெரியுது வாலைப் பெண்ணே

மேற்கண்ட பாடல் மூலம் தெரிந்த கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால் நமது உடலே கோயில், தலைப்பகுதியில் உச்சிக்கு கீழே உள் நாக்கு மேலே விளக்கு அல்லது சீவன் இருக்கு, அங்கே நினைவை வைத்திருந்தால் கடவுள் காட்சி தருவார் என்று பெரியோர் கூற்று.

சீவனிலிருந்து பிறக்கும் சக்தி கண், காது, மூக்கு, வாய், தோல் வழியாக வெளியே சென்று கொண்டே இருக்கிறது. இப்படி செலவாகும் பிராணனை தான் அபானன் என்கிறோம். அப்படி செலவாகும் சக்தியை சேமிப்பது என்பது சாதரண காரியம் கிடையாது. ஆனால் சாத்தியம் ஆகும். நம்முடைய கவனத்தை ஒரே இடத்தில் ஒடுக்கினால் சக்தி விரையமாகாமல் இருப்பது நம்மால் உணர முடியும். சக்தி செலவாகிறதா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்ளலாம்.

உன்மீது அன்பு கொண்ட அப்பா, அம்மா திட்டிவிட்டால் உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகிறது. உங்களுக்கு பிடிக்காத ஒருவனை நினைத்துக்கொண்டிருந்தால் வெறுப்பு வரும். அதனால் எவ்வளவு சக்தி செல்வாகிறது. நம் அதிகமாக உழைத்தால் உடல் சோர்வாகிறது. நீண்ட தூரம் ஓடினால் நாம் மூச்சு வாங்கிறோம். இது சக்தி செலவாகும் வெளிப்பாடே. ஆண் பெண் உறவு மேற்கொண்டால் மூச்சின் வேகம் அதிகமாகி சக்தி செல்வாகும். கெட்டுப்போன உணவை உண்டால் அடுத்த குறிப்பிட்ட நேரத்திற்க்கெல்லாம் உடல் அசதியாக மாறுகிறது. ஒரு அழகான பொருளையோ அல்லது பெண்ணையோ பார்கிறாய் என்றால் சக்தி கண்ணிலிருந்து வெளிபடும். இது போன்ற விசயங்கள் அனுபவமாகாமல் இருந்தால் அனுபவம் ஆக வேண்டும். இல்லை என்றால் நாம் கடவுளை வணங்கும் பொழுது மனம் தடுமாறும். இப்படி வெளியே செல்லும் சக்தியை ஒடுக்கி மனதை சீவனை நோக்கி பயணம் செய்தால் கடவுள் ஒளி நம் மீது படும். இது முக்திக்கான பாதை.

ஊதுபத்தி என்பது மூக்கின் வழியாக சுவாசமகிறது. கோயிலின் மணி காதின் மூலமாக சுவாசம் நடை பெறுகிறது. பிராசாதம் வாயின் வழியாக சக்தி உள்ளே செல்கிறது. இப்படி மூன்றும் ஒரு இடத்தில் இனையும் பகுதிக்கு விளக்கு ( நாம் வைக்கும் விளக்கு ) என்று பெயர். தேங்காய் வெள்ளை மனதை சொல்கிறது. வெள்ளை மனம் (சுத்தமான மனம் ) இல்லை என்றால் நாம் கடவுளை கான இயலாது. வாழைபழம் எதற்க்கு என்றால் அடுத்த பிறவி வேண்டாம் என்று சொல்லுவது. எல்லா பழத்தையும் சாப்பிட்டு விதையை போட்டால் செடியோ அல்லது மரமோ வந்து விடும். கொய்யா பழத்தை சாப்பிட்டு கழிவு வெளியாற்றினாலே விதை மரமாவதற்க்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் வாழைப்பழத்தை சாப்பிட்டால் அப்படி ஒரு வாய்ப்பு இல்லை என்று சொல்லும் தத்துவமாகும். அருகம் பில்லும் அதை தான் குறிப்பிடுகிறது. அடுத்த பிறவியை பற்றி எனக்கு தெரியாது இருந்தாலும் அதற்க்குத்தான் அந்த வாழைப்பழம்.

இந்த தத்துவம் எனக்கு தெரிந்து விட்டது அதனால் கோயிலுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்று அர்த்தம் கிடையாது. நம் உடலின் உள்ளே இருக்கும் கோயிலை பற்றி விளிப்புணர்வு வரும் வரையில் அங்கே செல்லவும். உள்ளே இருக்கும் கோயிலை பற்றி விளிப்புணர்வு ஏற்பட வேண்டுமென்றால் யோகா கலையை கற்றுக்கொள்ள வேண்டும். பின்பு அதை நடைமுறை செய்த்தால் கடவுளை காணலாம் என்று பெரியோர் கூற்று.

எனக்கு யோகா கற்க விருப்பமில்லை ஆனால் எனக்கு கடவுளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமிருந்தால் கேள்வியை கேளுங்கள். கோயிலில் இருக்கும் சிற்பங்கள் எதை குறிக்கிறது. கடவுள் எங்கே? கோயில் எப்படி உருவானது. ஒரு வேளை அரசாங்கம் மக்களை முட்டாள் ஆக்கிறதா என்பதை போன்ற கேள்வி எழ வேண்டும். சிவன் யார். விஷ்னு யார்? பிரம்மா யார். அல்லா யார். ஏசு யார்? பார்வதி அப்படின என்ன? முருகன் என்பவன் யார்? வினாயகன் யார். காளி எத்ற்க்கு. முருகன், சிவன் கையில் இருக்கும் வேல், சூலம் எதற்க்கு? எல்லாத்தையும் சந்தேகம் பட வேண்டும் அப்படிதான் கடவுளை கான முடியும்.

ஏன் கீழ் சாதி மக்களை கோயில்லுக்கு செல்லக்கூடாது? மேல் சாதி மக்கள் தான் செல்ல வேண்டும். ஏன் பிராமணன் என்று சாதி மக்கள் மட்டும் பூஜை செய்கிறார்கள் நாம் செய்யக்கூடாதா! நாம் எந்த சாதி அப்படின்னு கேள்வி எழ வேண்டும். இப்ப கோயிலில் பூஜை செய்யும் பிராமணன் அல்லது பிராமணக்குலம் என்பது ஏட்டு சுரைக்காய் போன்றது. உன்மையான பிராமணனுக்கு வெகு தூரம் உள்ளது.

வர்னம்( சாதி ) நான்கு வகை. சூத்திரன், வைஷ்னவன், சத்திரியன் மற்றும் பிராமணன். பிராமணன் கடவுளை கண்டவன். அவன் தினமும் பூஜை செய்வான். செய்யத்தெரியும். மற்ற வகுப்புகள் கடவுளை காணும் வழியில் உள்ளனர். ஒரு ஆழமான கினற்றில் நாம் உள்ளோம். கயிறு ஒன்று உள்ளது. கீழிருக்கும் நிலையில் நாம் சூத்திரன். கொஞ்சம் மேலே வந்தால் நாம் வைஷ்னவன். பாதி வழியை தாண்டி விட்டால் நாம் சத்ரியன். மேலே கடவுளை கண்டு விட்டால் நாம் பிராமனன். பிராமனன் நிலையிலிருந்து நாம் கீழேயும் செல்ல முடியும். தேவையில்லாத சிந்தனை நம்மை ஆட்கொண்டால் நாம் தானாக கீழே இறங்கி விடுவோம். அப்படி மேலே சென்று கீழே வந்தவனுக்கு மேலே செல்ல வழி தெரியும். விளிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

இப்ப தெரிகிறதா ஏன் கீழ் சாதி மக்கள் கடவுளை வணங்ககூடாது என்று. கடவுளை வணங்ககூடாது என்று இல்லை கடவுளை வணங்கமுடியாது. கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்று வழி தெரியாதவன் அல்லது அனுபவம் இல்லாதவன் என்று பொருள். தினமும் பிரசித்திபெற்ற கோயில்ல பூஜை செய்யும் ஐயன் நான் எனக்கே வழி தெரியாதா! உன்னை பற்றி தெரியவில்லை என்றால் சூத்திரன் என்று பொருள். உலகத்தில் எவ்வளவு பெரிய கோயில், சர்ச், ஆலயம், மசுதி எங்கெ பூஜை செய்தாலும் இது தான் அர்த்தம்.

கடவுளை வணங்க கூடாது என்பதற்க்கும் கடவுளை வணங்கமுடியாது என்பதற்க்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளது என்று யோசனை செய்யுங்கள். இப்படி தான் மக்களை முட்டாளாக மாற்றி வைத்துள்ளனர். இப்ப இருக்கும் சமுகத்தில் எவ்வளவு பெரிய இடத்தில் அல்லது பதவியில் இருந்தாலும் வழி சுத்தமாக தெரியவில்லை என்றால் சூத்திரன் என்ற சாதி அமைப்புக்கே வரவில்லை என்று பொருள்.

கடவுளை தேடிப்போகும் வழியில் உடலுறவு ஏற்பட்டு குழந்தை பிறந்தால் அது கீழ் சாதியுமில்லை. அது ஒரு மிருகம் அவ்வளவு தான். சூத்திரனுக்கு கயிறு ஒன்று உள்ளது என்று தெரியும் ஆனால் குழந்தைக்கு அது கூட தெரியாது. நீ இருக்கும் நிலையில்( சாதியில் ) ஒரு குழந்தை பிறந்தால் அந்த சாதி என்று கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது.பிராமண நிலை என்பது மனமற்ற நிலை அங்கெ எப்படி இரண்டு மனம் இயங்கும்? சூத்திரன் நிலைக்கும் கீழ் நிலையில் தான் இரண்டு மனம் சேரும். உடலுறவு சமயத்தில் கடவுளை வழிபட இயலுமா? எப்படி அவர்களுக்கு பிறந்த குழந்தை பிராமனன், சத்ரியன், வைஷ்னவன் என்று பிரிக்க இயலும்? இந்த ஜென்மத்தில் சூத்திரனாக பிறந்து விட்டோம் அடுத்த ஜென்மத்தில் பிராமனனாக பிறக்கலாம் என்று கணவு கானாதே. ஒரே ஜென்மத்தில் முயற்சி செய்தால் சூத்திரன் நிலையில் இருந்து பிராமன நிலைக்கு செல்ல முடியும். சாதி அமைப்பு என்பது மாறகூடிய நிலை.

இந்த வர்ணப்பிரிவை ஒரு உயர்ந்த வகுப்பை சேர்ந்தவன் ( குருவால் ) பிரிக்க இயலுமா அல்லது இயலாதா என்ற கேள்வி எழுகிறது . இந்த சாதி என்பது தேவையில்லாத ஒரு மாயை என்று தான் தோன்றுகிறது. இப்படி பட்ட விஷயங்களை யோசனை செய்யுங்கள்.

பாரதியின் பாடல் வரிகளை சற்று நேசியுங்கள்:

உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும்.
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே
காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே
எல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுளதென் றறிஞர் என்றும்மய லெய்துவதாய்.
வெட்டவெளி யாயறிவாய் வேறு பல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்.
தூல வணுக்களாய்ச் சூக்கு மமாய்ச சூக்குமத்திற்
சாலவுமே நண்ணிதாய்த் தன்மையெலாந் தானாகி
தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒருபொருளாய்த்
தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே.
எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே
வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாய்தனை யீட்டுவதாய் நிற்குமிதே.
காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய்
மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே.
எல்லாந் தானாகி யிருந்திடிலும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே.
மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;
பற்றிதனைக் கொண்டார் பயனனைத்துங் கண்டாரே.
இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்
எப்பொருளுந் தாம் பெற்றிங் ன்பநிலை யெய்துவரே.
வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே.
ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆடுவர்காண்;
என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே.
வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா!
யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா!
எண்ணமிட்டா லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதையுள்ளே ததும்பப் புரியுமடா!
எங்கும் நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா!
காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே.
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங் ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா!

தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா!
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா!

சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின் றசிவம்,
வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா!
நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுள்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா!

இடைவெளி இல்லாமல் கேள்விகள் கேட்கத்தொடங்கினால் வேள்வி பிறக்கும். பாரதியின் “தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா!
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா!” போன்ற வரிகளும் அதனை குறிக்கிறது.

இன்பத்தின் பார்வை:

ஊதுபத்தி மூக்கிற்க்கு இன்பம் தருகிறது. வாழைபழம், பிரசாதம் நாக்கிற்க்கு இன்பம் தருகிறது. கோயில் மணி காதிற்க்கு இன்பம் தருகிறது. பூ தொடுதலுக்கும் மூக்கிற்க்கும் இன்பம் தருகிறது. விளக்கு அல்லது கற்புரம் கண்ணிற்க்கு இன்பம். கர்பகத்தினுள் இருக்கும் கல் வடிவமான சிலையை சீலையால் மூடியிருப்பார்கள். அதை திறந்தால் சில பேருக்கு உடல் முழுவதும் சிலிர்த்து எல்லா புலனுக்கும் இன்பம் தரும். ஒருவேளை அந்த துனியில்லாமல் எந்த விதமான அழகும் சேர்க்காமல் இருந்தால் உடல் எவ்வளவு நேரம் சிலிர்க்கும் என்ற கேள்வி எப்பொழுதாவதா தோன்றியுள்ளதா? இன்பத்தை தேடுவதே கோயிலின் கோட்பாடாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

சில கோயிலுக்கு சென்றால் பலவிதமான சிலை வடிவங்கள் காணலாம். போர் சிற்பங்கள், ஆண் பெண்ணின் உடல் உறவின் சிற்பங்கள், மருத்துவ சிற்பங்கள் போன்றவற்றை காணலாம். இது பெரும்பாலும் வெளிபுறத்தில் இருக்கும். உள்ளே கடவுள் சிற்பங்களான சிவன், பார்வதி, விஷ்னு, பிரம்மா, காளி, பைரவன் இருக்கும். இது என்ன சொல்கிறது என்றால் வெளிபுறத்தில் இருக்கும் சிலை சிற்றின்பம் வடிவம். உள்ளே இருப்பது பேரின்பம் வடிவம். ஒரு அழகான உருவத்தையோ அல்லது பொருளையோ முதல் முதலாக பார்கிறீர்கள். உங்களுக்கு அதனால் இன்பம் வருகிறது. மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருந்தால் இன்பம் வருகிறதா! என்று நாம் யோசிக்க வேண்டும். ஒரு சிரிப்பு கதைகளை குழந்தைகளுக்கோ அல்லது மற்றவர்க்கோ சொல்கிறோம் என்றால் முதலில் சிரிப்பு வரும். அதே கதையை மறுபடியும் சொல்லிக்கொண்டே இருந்தால் சிரிப்பு வராது. எப்பொழுதாவது யோசித்து இருக்கிறமோ ஏன் மீண்டும் மீண்டும் அதே செயலை செய்து கொண்டிருந்தால் சிரிப்பு வர மறுக்கிறது என்று? ஒருவனை உங்களுக்கு பிடிக்கவில்லை அவனிடம் சண்டை செய்கிறீர்கள். சண்டை போடும் பொழுது உங்களுக்கு இன்பம் வருகிறதா அல்லது துன்பம் வருகிறதா என்று எப்பொழுதாவது யோசித்து இருக்கிறீர்களா? இரண்டு சேவல் சண்டை போடுகிறது அதை பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள் உங்களுக்கு ஒரு விதமான இன்பம் வருகிறது. ஒரு நாள் அந்த இன்பம் வரும். மீண்டும் மீண்டும் சேவல் சண்டை போடுவதை பார்த்தால் இன்பம் வருகிறதா.

உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு உணவை சாப்பிட மனம் ஏங்குகிறது. ஒரு தடவை சாப்பிட ஆரம்பித்த பிறகு மீண்டும் கேட்கிறது. மீண்டும் சாப்பிட்ட பிறகு மனம் மீண்டும் கேட்கிறது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் சாப்பிட முடிய வில்லை. ஏன் என்று யோசித்ததுண்டா? மனம் இன்பத்தை தேடுகிறது ஆனால் உடலால் அதை ஏற்க முடியவில்லை. மாற்று பாலினம் இல்லாத சமயத்தில் சுயயின்பம் கொள்கிறோம். அந்த சுயயின்பத்தை குறிப்பிட்ட நேரத்திற்க்கு மேல் அனுபவிக்க முடியவில்லை. ஏன் என்றால் உடல் சோர்ந்து போகிறது. அடுத்த குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் தொடர்கிறோம். மீண்டும் அதே பிரச்சனை. ஏன் என்று யோசித்ததுண்டா? ஒரு வேளை மீண்டும் செய்ய முற்படும் பொழுது உடல் தன்நிலை இழந்து நோய் தொற்றிகொள்கிறது. ஆண் பெண் உடலுறவு செய்யும் பொழுதும் அதே பிரச்சனை. உங்கள் மனம் இன்பத்தை தேடுகிறது. ஆனால் கிடைக்கவில்லை. வேர ஏதேனும் வழி இருக்கிறதா என்று மனம் யோசிக்க ஆரம்பிக்கிறது. ஒரு ஆண் ஒரு பெண் என்றில்லாமல் ஒரு ஆணும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களும் அல்லது ஒரு பெண்ணும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களும் சேருகிறீர்கள். அங்கேயும் இன்பம் குறைவாக உள்ளது.

என்ன வேண்டுமானலும் செய்யுங்கள், உலகத்திலே மிக பெரிய பணக்காரராக மாறுங்கள் அப்பொழுது இன்பம் எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்று பாருங்கள். உலகத்தில் உள்ள அத்தனை கோயிலுக்கும் செல்லுங்கள், எல்லாத்திலும் உங்கள் மனதை செலுத்துங்கள் உங்களின் இன்பத்தின் நேரத்தை கணக்கில் கொள்ளுங்கள். பணம் இருந்தால் நிலாவுக்கு சென்று வாருங்கள் அங்கே இன்பம் கிடைக்கிறதா என்று பாருங்கள். புதிய விசயங்களை கண்டுபிடியுங்கள், நீங்கள் கண்டுபிடித்த பொருள் எல்லோருக்கும் பயண்படுகிறது என்றால் உங்களுக்கு புகழும் பணமும் வரும். அதனால் எவ்வளவு நேரம் இன்பம் அடைகிறோம் என்று உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள். தளர்ந்து விடாதிர்கள். பிறந்தது எதற்க்கு என்றால் இன்பத்தை அனுபவம் செய்வதற்க்கே?

மனதுக்கு இன்பம் கிடைக்கிறது ஆனால் இன்பத்தின் நீளம் மிகவும் குறைவாக உள்ளது. ஏன் என்னால் இன்பத்தின் நேரத்தை அதிகமாக உனர முடியவில்லை என்ற கேள்வி மனதில் எழுகிறது என்றால் உங்களுக்கு பேரின்பத்தின் வாசல் திறப்பதற்க்கு வாய்ப்புள்ளது என்று அர்த்தம். இன்பத்தின் நேரம் குறைவாகவும் உடல் சோர்வும் ஏற்படுகிறது என்றால் அது சிற்றின்பம்.
சிற்றின்பம் இருக்கிறது என்றால் பேரின்பம் என்று ஒன்று இருக்கலாம் என்று கேள்வி எழுகிறதா!

இறைவன் என்பது இன்பத்தின் நீளம்
அடைவதென்பது வாழ்வின் நோக்கம்.

நாம் இன்பத்தின் நேரத்தை அதிகம் செய்ய வேண்டுமென்றால் யோகா கலை மூலம்தான் அது சாத்தியம் என்று பெரியோர்களின் கூற்று. எங்கும் இறைவன் இருக்கிறான் என்றால் நம்முள்ளும் இருக்கிறான். மற்ற இடத்தில் முதலில் தேடாமல் நம்மிலிருந்து ஆரம்பம் செய்வோம். தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும். மனதை.யோசிப்போம். செயல்படுவோம். உயருவோம்.

மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
–சசிகுமார் சின்னராஜு

Share

sasikumar

i am sasikumar graduated as an Electrical and Electronics Engineer. Now i am working as software web developer. Since my college first year onwards my thoughts move towards peace and still i collecting information related to simple and happy living style. Here i share Information related to health, simple life style and yoga.

One thought to “கடவுள் எங்கே”

Leave a Reply to ARUNACHALAM Cancel reply

Your email address will not be published. Required fields are marked *