உப்பு

உப்பை சாப்பிடக்கூடாது என்று ஒருவரும் சாப்பிட வேண்டும் என்று ஒருவரும் சொன்னால் என்ன செய்வது? கடல் உப்பு விடம் என்று சொன்னால் நாங்கள் எந்த உப்பை சாப்பிடுவது. காய்கறி பழங்களில் உப்பு ஏற்கனவே இருப்பது ஆய்வுகள் சொல்கிறது. இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு உப்பை நரம்பின் வழியாக சக்திக்காக கொடுப்பதாக செவி செய்தி. உப்பில்லாத பண்டம் குப்பை என்று பழமொழி உண்டு. ஆறு சுவைகலும் உணவில் சேர்த்து சாப்பிடனும் என்று இயற்கை வாதிகள் சொல்கிறார்கள். உப்பையும் சேர்த்து தானே? ஆறு சுவை பார்ப்போம். 1.இனிப்பு(இனி+உப்பு ),2.புளிப்பு( புளி+ உப்பு),3.துவர்ப்பு(துவர்+உப்பு),4.கசப்பு(கச+உப்பு),5.கார்ப்பு(காரம்+உப்பு),6.உவர்ப்பு(உவர்+உப்பு). எல்லா சுவைகளிலும் உப்பு இருக்கிறது. பின்பு உப்பு ஏன் தனியாக சேர்கிறோம்? இல்லை உவர்ப்பு தான் உப்பா? பொதுவாக சாப்பிடும் உணவுகளில் உப்பு பற்றாக்குறை சமாளிப்பதுக்காக உப்பு சேர்த்து கொள்கிறோமா?

காடுமேடுகளில் இருக்கும் உப்புவுடன் நீர் கடந்து கடலில் கலக்கிறது.அந்த உப்பை தான் பிரித்தெடுத்து நாம் சாப்பிடுகிறோம்.முன்பொரு காலத்தில் காடுமேடு சுத்தமாக இருந்திருப்பதால் உப்பு விடம் இல்லை என்றும் இப்போ நீர் கடந்து வரும் பாதை கழிவுகள் இருப்பதால் உப்பு விடமா?.
கடல் உப்பு விடம் ஆதலால் இந்துப்பு,கறி உப்பு உணவில் சேர்த்து சாப்பிடலாம் என்று ஒரு பக்கம். எமக்கு சந்தேகம் உப்பை உணவில் சேர்க்கலமா வேண்டாமா? இயற்கையே எங்களை காப்பாற்று.

உப்பை யாரும் சாப்பிட சொல்லவில்லை உப்பு சுவைக்காக சேர்த்துக்கொள்கிறது என்றும் சொல்வதுண்டு. ஏற்க்கனவே உணவில் உப்பு இருக்கிறது. அதை எப்படி பயன்படுத்துவது என்று யாரும் சொல்லித்தர முன்வருவதில்லை. உணவு, நீர், காற்று, உழைப்பு, தூக்கம், உடலுறவு போன்றவற்றை சரியான முறையில் பயன்படுத்த தெரிந்தால் தேவையான உப்பை உடல் தானாகவே எடுத்துகொள்ளும். உணவை நன்றாக மென்று அருந்த வேண்டும், தண்ணீரை சப்பி சாப்பிடவேண்டும், சரியான உடல் உழைப்பு, சரியான தூக்கம், காற்றோட்டமான இடத்தில் வாழ்வது, சூரிய ஒளி சில நிமிட நேரம் உடலில் படுவது பொன்ற விசயத்தை பயன்படுத்தினால் உப்பை நாம் சுவைக்காக சேர்த்துகொள்ள அவசியமில்லை. அயொடின் கலந்த உப்பு சாப்பிட்டால் தொண்டை பிரச்சனை வராது என்று சொல்லி அயொடின் கலந்த உப்பை வினியோகம் செய்கிறார்கள். சரியான முறையில் சாப்பிட தெரிந்தால் தொண்டைப்பிரச்சனை வராது.

காந்தி உப்பு சத்யாகிரகம் நடத்திய பிறகு தான் உப்பை உணவில் அதிகம் சேர்த்துகொள்ளபடுகிறது என்ற சந்தேகம் அதிகமாக உள்ளது. காந்தி அவரே முடிதிருத்தம் செய்து கொள்வார் என்ற வாக்கியம் மனதில் முடி வெட்ட வேண்டும் என்ற எண்ணம் உதிக்கிறது. இதுயெல்லாம் யோசித்தால் வியபாரி பணம் சம்பாதிப்பதற்க்காக நம்மை என்ன வேண்டுமானலும் செய்வார்கள் என்றும் தோன்றுகிறது. இயற்கையோடு இயற்கையாக வாழும் எந்த மிருகங்கள் எப்பொழுதாவது உப்பு சாப்பிடுகிறதா! நாம் மட்டும் ஏன் சாப்பிடவேண்டும். சமைக்காமல் சாப்பிடும் பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்துள்ளது. அப்படி சாப்பிடும் பொழுது உணவில் உப்பின் சுவை குன்றாது.
யோசிப்போம். செயல்படுவோம். உயருவோம்.

மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.

–சசிகுமார் சின்னராஜு

Share

sasikumar

i am sasikumar graduated as an Electrical and Electronics Engineer. Now i am working as software web developer. Since my college first year onwards my thoughts move towards peace and still i collecting information related to simple and happy living style. Here i share Information related to health, simple life style and yoga.

One thought to “உப்பு”

 1. உப்பிட்டவரே விஷமிட்டவராவார் ! – நவீன பழமொழி!

  ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை…’‘

  உப்பில்லாப் பண்டம் குப்பையிலே…’

  -இப்படி, உப்பின் பெருமை பேச எத்தனையோ புகழ் மொழிகள் உண்டு அது மட்டுமின்றி . நாம் பெரும்பாலும் போரான விஷயங்களைக் பேசும்போது ‘உப்பு சப்பில்லாத’ சமாசாரம் என்கிறோம். ‘உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா’ என பாட்டை ரசிக்கிறோம். உப்பு அத்தனை ஒஸ்தி! உணவிலிருந்து நமக்குக் கிடைக்கிற சத்துகளில் முக்கியமானது உப்பு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடையே உப்பாக உபயோகிக்கிறோம். இதற்கிடையில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு மட்டுமே தேவை. ஆனால், ஒவ்வொருவரும் அதைவிட எக்க்சக்கமாகத்தான் உப்பை மட்டும் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். இப்படி அறியாமையால் உப்பைத் தின்று சீரழிகிறது ஆறறிவு மனித இனம். உண்மையில் உப்பு உணவு பொருளே அல்ல, இது இரும்பையும் அரிக்கும் ரசாயனப் பொருள், உடலுக்கு அந்நியப் பொருள். அதனால் உடலுக்கு தேவையற்ற பொருள் உப்பு. மனிதனின் உடலையும் உள்ளத்தையும் பாடாய்ப்படுத்துகிறது. அதனால் இனி உப்பிட்டவரே விஷமிட்டவராவார் ! – நவீன பழமொழி புழக்கத்தில் வந்தாலும் ஆச்சரியமில்லை!
  Salt-Danger-1
  ஒட்டு மொத்த விலங்கினமும், அதனதன் உடலமைப்புக்கும், உறுப்புக்களின் அமைப்புக்கும் பொருத்தமான உணவுகளை தேர்ந்தெடுத்து, அவற்றை மட்டுமே பரம்பரையாக உண்டு வாழ்கின்றன. அதனால் அவற்றுக்கு கொஞ்சம் கூட உப்பு தேவைப்படவில்லை. அதனால் அவை தமது உணவுடன் இந்த உப்பை கலக்காமல் நேரடியாக உண்டு ஆரோக்கியமாக வாழ முடிகிறது. இப்படி இயற்கையாக உண்பதால் இயற்கையாக வாழவும் முடிகிறது இது போல் மனித இனமும் அப்படி இயற்கையாக உண்ணவும், இயற்கையாக வாழவும் முடியும்.

  உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது தவறு!

  எத்தனையோ பண்டங்களை உப்பு சேர்த்து வேக வைக்காமல் நேரடியாகவே உண்டு வாழ முடிகிறது. அவையெல்லாம் மனித உடலுக்கு பொருத்தமான உணவு பண்டங்கள் ஆகும். எனவே தக்க உணவுக்கு உப்பு வேண்டாம் என்பதே சரியாகும். மனிதன் சாப்பிட வேண்டியதை சாப்பிட்டு வாழ்வதானால் அதில் உப்பை கலக்க வேண்டாம்.

  உப்பும் உடலும்:

  அரித்துக் கொல்லும் உப்பை உடல் செரிமானம் செய்வதுமில்லை, செலவுசெய்வதுமில்லை. உடலுக்கு அது தேவையுமில்லை என்பதால் உண்ட உப்பைமுழுவதையும் உடல் வெளியே தள்ளி விடுகிறது. உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பது அந்த உப்பை கரைத்து வெளியேற்றதான். உடலுக்கு தேவையற்ற உப்பைதான் விலைக்கு வாங்கி உணவுடன் சேர்த்து வேக வைத்து உண்கிறோம். அறிவில்லாதவனுக்கு ஒழிவில்லாத வேலை என்பது பழமொழி. கருவறையில் தொடங்கி மனிதனின் இறுதி மூச்சுவரை இந்த வீண் வேலை நடந்து கொண்டே இருக்கிறது.

  உணவில் உப்பிருக்கும்வரை உடல் உப்பு நீக்கி எந்திரமாக செயல் பட்டுக்கொண்டே இருக்கும். அதனால் மனிதன் உழைக்காமலேயே களைப்படைகிறான். ஓய்விலும் தூக்கத்திலும் கூட வியர்க்கிறது; வியர்வையை உறிஞ்ச உள்ளாடைகள் தேவைபடுகின்றன. உப்பின் அரிப்பை உணராமல் இருக்க மின்விசிரியும்; குளிர்பதன அறையும் தேவைப்படுகிறது. வியர்வை நாற்றத்தை போக்க வாசனை திரவியங்கள் தேவைப்படுகின்றன. உப்பை விட்டு வாழ்கின்றவனக்கு வெயிலும் மழையும் பணியும் குளிரும் உடலுக்கு இதமாகவே இருக்கிறது; உலகமே AC அரங்கமாகிவிடுகிறது.

  உப்பு, உணவுப் பாதையில் இருக்கும் வரை உடலுக்குக் கேடில்லை. உப்பு உணவு பாதையை அரிக்கமுடியாது ஆனால் அங்கிருந்து இரத்தத்திற்கு வரும் உப்பு உடலை அரிக்கத் தொடங்கிவிடும். அதனால் மொத்த உடலும் முயன்று உழைத்து அதிக இரத்த ஓட்டத்தின் மூலம் உப்பை வெளியேற்றுகிறது. உடலைவிட்டு வெளியேறும் எல்லா திரவங்களின் வழியாகவும் உப்பு வெளியேறுகிறது. அதனால்தான் வியர்வையிலும் சிறுநீரிலும் உப்பின் சுவையை மட்டும் உணர்கிறோம். புளிப்பும் காரமும் இனிப்பும் மற்ற சுவைகளும் செரித்து விடுகின்றன, செலவாகி விடுகின்றன.தேவையற்ற உப்பை உணவில் சேர்ப்பது சுவைக்காக கூட அல்ல! உடலில் செல்லுபடியாகாத பண்டங்களை செல்லுபடியாக்கத்தான் அவற்றுடன் உப்பை சேர்த்து வேக வைத்து உண்கிறோம்.

  உடலும் உணவும் :

  அரிசி, பருப்பு, கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற உலர்ந்த உணவுப் பண்டங்களை நேரடியாக உண்டு வாழும்போது ரத்தவோட்டம் தடைபடுகிறது. அதனால் இவையெல்லாம் மனித உடலுக்கு பொருத்தமற்ற உணவுப்பண்டங்கள் ஆகும். இவற்றுடன் உப்பை சேர்த்து வேக வைத்து உண்டால் ரத்தவோட்டம் தடைபடுவதில்லை. உப்பிற்காக உடலில் தேக்கப்படும் தண்ணீரும் உப்பிற்கான அதிக ரத்தவோட்டமும் சேர்ந்து இரத்தவோட்ட தடையை உடைக்க உதவுகிறது.

  அடுப்பெரிக்க விறகு பயன்படுவதை போல உடலில் அதிக ரத்தவோட்டத்தை உண்டாக்கவும், உடலில் தண்ணீரை தேக்கவும் உப்பு பயன்படுகிறது. தவறான உணவு பண்டங்களை உண்டு வாழ உப்பு உதவுகிறது. மனிதனுக்கு உப்பு இந்த ஒரே ஒரு உதவியை செய்து விட்டு மற்ற எல்லா துன்பங்களையும் கொண்டுவருகிறது. உணவல்ல உப்பு, உபகார சத்ரு!

  உப்பை தின்னும் மனிதன் இயற்கையான இரத்தவோட்டத்தில் வாழ முடிவதில்லை. உப்பிற்கான இந்த அதிக இரத்தவோட்டம், செயற்கையான இரத்தவோட்டமாகும்; தவறான இரத்தவோட்டமாகும். இந்த தவறான இரத்தவோட்டம் மனிதனின் இயற்கையான உடல்நலத்தையும், உள்ள நலத்தையும் பாதிக்கிறது. அதனால் உடலில் உப்பிருக்கும் வரை மனிதன் மனிதனாக வாழ முடிவதில்லை.

  சாமியார் பூனை வளர்த்த கதையாக உணவுக்கு உப்பு வந்ததால் தேவையற்ற எல்லா தேவைகளும் வந்தன, எல்லா குற்றம் குறைகளும் கொடுமைகளும் வந்தன. உப்பு, பஞ்சமா பாதகங்களையும் செய்ய வைக்கிறது. உடலுக்கும், மனதிற்கும், சமுதாயத்திற்கும், நோய்களைத் தருகிறது. உடலிலும் ஊரிலும் சாக்கடையைத் தேக்குகிறது. சமையல் இல்லையேல் சாக்கடை இல்லை.

  உப்பும் சமையலும்:

  உணவில் உப்பை கலப்பதைத்தான் சமைத்தல் என்கிறோம். ஆகவே உப்பை விடுவது என்றால் சமைத்த உணவை விடுவது என்று பொருள்.சமைத்தல் என்ற சொல்லுக்கு தயார் செய்தல், பக்குவப்படுத்துதல் என்றெல்லாம் பொருள். உணவை வேக வைப்பதே அதில் உப்பை கலப்பதற்காகத்தான்.

  ரத்தத்தில் உணவும் உப்பும் சீரான அளவிலும், போதுமான அளவிலும் கலந்து ஓடுவதற்காகத்தான் உணவை சமைக்கிறோம். மனிதன் பானை செய்ய கற்பததற்குமுன் உணவையும் உப்பையும் சேர்த்து, இடித்து தூளாக உண்டு வாழ்ந்தான். பின்னர் உணவையும் உப்பையும் சேர்த்து அரைத்து துவையலாக உண்டு வாழ்ந்தான். இன்று நெருப்பே இல்லாமல் நுண்ணலை அடுப்பிலிட்டு உணவையும் உப்பையும் சேர்த்து வேக வைத்து உண்கிறான்.

  உணவில் உப்புக்காக புளிப்பையும், புளிப்புக்காக காரத்தையும், காரத்திற்காக எண்ணையையும் உணவில் சேர்க்கிறோம். உணவுக்கு உப்பு வேண்டாம் என்றால் இவற்றை சேர்த்து வேக வைக்கவும் வேண்டாம். உணவை மட்டும் நேரடியாக உண்டு வாழலாம்.

  மனித உடலுக்கு பொருத்தமான உணவுகள்:

  பழங்கள், பச்சை காய்கறிகள், முளைவிட்ட தானியங்கள் (அவல்), தேங்காய் போன்ற கொட்டைகளின் பருப்புககள், உலர்ந்த பழங்கள், தேன், இளநீர், நுங்கு, பதநீர் போன்ற உணவு பண்டங்களை எத்தனை ஆண்டுகள் நேரடியாக உண்டு வாழ்ந்தாலும், ரத்த ஒட்டம் தடை படுவது இல்லை. ஆகவே இவையெல்லாம் மனித உடலுக்கு பொருத்தமான உணவுப் பண்டங்கள் ஆகும், மனிதன் உண்டு வாழ வேண்டிய உணவு பண்டங்கள் ஆகும், மனிதனின் இயற்கையான உணவுகள் ஆகும்.

  மற்ற விலங்கினங்கள் அதனதன் உடலமைப்பிற்கும், உறுப்புகளின் அமைப்பிற்கும், பொருத்தமான உணவுகளை தேர்வு செய்து பரம்பரையாக அவற்றை மட்டுமே உண்டு வாழ்கின்றன. அதனால் அவற்றிற்கு உப்பு தேவைப்படுவதில்லை. உலகெங்கும் எக்காலத்தும் ஆட்டுக்கு உணவு இலை தழைகளே, மாட்டுக்கு உணவு புல் வகைகளே! புலி சிங்கம் போன்ற ஊன் உண்ணிகளுக்கு உணவு மாமிச வகைகளே. அவையெல்லாம் அதனதன் இயற்கையான உணவுகள் ஆகும். அதனால்தான் புலி பசித்தாலும் புல்லை தின்பதில்லை.

  காட்டில் வசிக்கும் தாவர உண்ணிகள் தவறான உணவுகளை மேய்ந்து விடும்போது மட்டும் உப்பை தேடி அலைந்து நக்கி ரத்தவோட்ட சிக்கலை சரி செய்து கொள்கின்றன. ஆறறிவு மனிதன் விவசாயம் செய்து தவறான உணவுகளையும் உப்பளங்களையும் தயார் செய்து சமைத்து உண்கிறான்.

  மற்ற எல்லா விலங்கினங்களும் உப்பின்றி வாழ்வதால் பிறப்பு முதல் இறப்பு வரை நோயின்றி வாழ்கின்றன. சோம்பல் சோர்வு களைப்பு என்றால் என்னவென்றே உணராமல் வாழ்கின்றன. அதனால் அடுத்தவர் உதவியின்றி வாழ்கின்றன காம வெறியின்றி வாழ்கின்றன.

  அவை வாழ நிலமும், நீரும், உணவும், காற்றும், கதிரும் மட்டுமே போதுமானவை. மனித இனமும் விலங்கினம்தான் என்பதால் மனிதனும் அப்படி தனக்குரிய உணவு பண்டங்களை இயற்கையாக உண்டு, இயற்கையாக வாழ முடியும்.

  எனது உணவு அனுபவங்கள்:

  எனது வயது 60. நாற்பதிலிருந்து 55 வயது வரை சமைக்காத இயற்கை உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்தேன் (அதிலும் தேங்காயையும், வாழைப்பழங்களையும் மட்டுமே உண்டு வாழ்ந்தேன்.) அந்த 15 ஆண்டுகள் சொர்க்கத்தில் வாழ்ந்தேன்.

  மீண்டும் கடந்த 5 ஆண்டுகளாக சமைத்த உணவுக்கு மாற முயன்று வருகிறேன், முடியவில்லை. அதிலுள்ள உப்பை உடல் ஏற்கவில்லை. அந்த 15 ஆண்டுகளில் என் உடலின் உயிரணுக்கள் பல தலைமுறைகள் புதுபிக்கபட்டு விட்டன. ஆகவே அவையெல்லாம் உப்புக்கு பழக்கபடாதவை என்பதால் இன்றைய உடல் உப்பை ஏற்கவில்லை.

  மீண்டும் படிப்படியாக உடலுக்கு உப்பை பழக்க மேலும் பல பத்தாண்டுகள் ஆகலாம். அதற்கு மீதமுள்ள ஆயுள் போதாது என்பதை உணர்கிறேன்.

  உப்பைவிட்டால்…

  ஒரு நாளைக்கு ஒரு கிலோ உணவு போதும். அதற்கு மேல் உண்ண முடியாது. ஒரு லிட்டர் தண்ணீர் போதும். அதற்கு மேல் தேவைபடாது. இயற்கை உணவிலுள்ள தண்ணீரே கூட போதும். உப்பை தின்றவன் தான் தண்ணீரை அதிகம் குடிப்பான். நான்கு மணி நேர தூக்கம் போதும். அதுவும் கோழித் தூக்கமே. கனவுகளே வருவது இல்லை. இடையில் சமைத்த உணவை உண்டு பார்த்தால் மட்டுமே கனவுகள் வருகின்றன.
  Salt-Danger-2
  யோகாசனம், பிராணாயாமம், தியானம் செய்யாமலேயே அதன் பயன்களை அனுபவிக்க முடியும். காமவெறி இல்லை ஆண், பெண் வேறுபாடில்லை. அதனால் உடை கூட வேண்டாம். பெண்களுக்கு மாதவிடாய் நீண்டு வருட விடையாக நீளும். மரம், செடி கொடிகளில் தானாக விளைவதே போதும். விவசாயம் செய்ய வேண்டாம். உப்பலங்கள் வேண்டாம். வண்டி வாகனங்கள், கருவிகள், சாலைகள் வேண்டாம்.

  யாருக்கும் யாருடைய உதவியும் வேண்டாம். அதனால் பேச்சும், எழுத்தும், மொழியும் வேண்டாம். அதனால் விருப்பு வெறுப்புக்கோ, பந்த பாசத்திற்கோ அவசியமில்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழலாம் . வெயிலும், மழையும், பணியும், குளிரும் உடலுக்கு இதமாகவே இருக்கும், உலகமே AC அரங்காக மாறிவிடும் அதனால் வீடு வேண்டாம்.

  தன்னிறைவு, தற்சார்பு, தன்னாட்சி – இவை எல்லாம் தானாகவே வந்து விடுவதால் அரசாங்கம் வேண்டாம். மனித இனமும் விலங்கினம்தான். உப்பு உணவு பொருள் அல்ல! ஆகவே மனிதன் மட்டும் உப்பை தின்பது மடமை, கொடுமை!

  பின்குறிப்பு: முயற்சி உடையோர் உப்பை தின்னும் காரணத்தை அவரவர் உடலிலேயே சோதித்து உணர முடியும். நான்கு நாட்கள் வரை தண்ணீரை மட்டும் கொண்டு உண்ணா நோண்பிருக்க வேண்டும். உடலில் உள்ள பழைய உணவும், உப்பும் நீங்கி விடும். உண்ணா நோன்பிருக்க முடியாதவர்கள் பழங்களை மட்டும் உண்டு வரலாம். அந்நிலையில் டி, காபி , பிஸ்கட், வறுகடலை, பட்டாணி, மிக்சர் போன்ற உப்பில்லாத அல்லது உப்பு குறைந்த உணவு பண்டங்களை உண்டு பார்த்தல் சில நிமிடங்களில் இருமல் வரும். நுரையிரல் ரத்தவோட்டம் தடை படுகிறது என்பது இதன் பொருள். உடனே உப்பு நீரையோ, சாம்பார் சாதமோ சாபிட்டால், இது சரியாகிவிடும். ஆனால் இயற்கை உணவுகளை எத்தனை வருடங்கள் சாப்பிட்டாலும் ரத்தவோட்டத்தில் தடை ஏற்படுவதில்லை!

  மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:

  M. சண்முகம்
  நெய்வேலி

  07373409230

  தகவல்:;;Anbalagan Veerappan

  http://www.aanthaireporter.com/11498/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *