குருஷேத்திரம் தர்மசேத்திரம்

குருசேத்திரம் என்ற பெயரை கேட்டவுடன் நினைவுக்கு வருவது மஹாபாரத போர். அப்படிபட்ட போர் எங்கே நடந்தது எதற்க்காக நடந்தது. மஹாபாரதத்தில் போர் நடந்த இடமான குருசேத்திரம் என்பது தற்போதுள்ள இந்தியாவின் ஹரியான மாநிலத்தின் நகரம் கிடையாது. அப்போது குருசேத்திர போர் எங்கே நடந்தது? குருஷேத்திர போர் என்பது ஆத்மாவை நோக்கி பயனம் செய்யும் பொழுது உடலுடனும் மனதுடனும் நடந்த போர். குரு என்பது காரனகுரு மற்றும் காரியகுருவை குறிப்பதாகும். காரனம் என்பது மனமும், காரியம் என்பது மனதினால் விளையும் செயல்பாடுகளை குறிப்பதாகும். சேத்திரம் என்பது உடலை குறிப்பதாகும். ஆத்மாவை நோக்கி பயனம் செய்யும் பொழுது நமது மனம் மற்றும் உடலின் மீதுள்ள பற்றுகள் நம்மை முன்னேரவிடாமல் எதிர்த்து நிக்கும். வைராக்கியம் நிறைந்த மனிதன் எதிர்க்கும் பொழுது மிகப்பெரிய போர் நடக்கும். அந்த போரை தான் குருசேத்திர போர் என்று மஹாபாரத கதையின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடமாகும்.ஆத்மாவை நோக்கி பயனம் செய்ய வேண்டும் என்றால் யோகா / தியானத்தை தவிர வேறு வழி கிடையாது.

பாண்டவர்களின் பிள்ளைகளாகிய தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரும் திருதிராஷ்டனின் பிள்ளைகளாகிய துரியோதனனும் அவனின் சகோதரர்கள் 99 பேரும் ஹஸ்தினாபுரத்தில் வாழ்ந்து வந்தனர். பீஷ்மர் திருதிராஷ்டனுக்கும் பாண்டவனுக்கும் மூத்தவர். பீஷ்மரை பிதாமகர் என்று அனைவரும் அழைத்தனர். குந்தி தேவி பாண்டவர்களின் தாயாகவும், காந்தாரி துரியோதனனுக்கும் அவனது 99 சகோதரர்களுக்கும் தாய் ஆவள். குந்தி தேவி சிறுவயதில் துர்வாச முனிவருக்கு மிகுந்த அன்புடன் உபசரித்ததால், முனிவர் மகிழ்ந்து மந்திரம் ஒன்றை வழங்கினார். எந்த கடவுளை நினைத்து மந்திரம் சொன்னாலும் அக்கடவுளின் பண்புகளுடன் குழந்தை பிறக்கும். விளையாட்டாக சூரியனை நினைத்து சொன்னதால் சூரியன் குந்தியின் முன் தோன்றி தன் குழந்தையை கொடுத்தார். அக்குழந்தை தான் கர்னன். காதில் குண்டலமும் மார்பில் கவசத்துடன் கர்ணன் பிறந்தார். விவரமறியாமலும் கல்யானம் செய்யாமல் இருந்த குந்தி தன் மகனை பெட்டியில் வைத்தி ஆற்றில் விட்டுவிட்டால். குந்தி தேவிக்கு கர்ணனுடன் மொத்தம் ஆறு பிள்ளைகள். குந்திதேவிக்கு கர்ணன் தன் மூத்த மகன் என்று போர் நடக்கும் பொழுது கிருஷ்னனின் மூலம் அறிந்திகொள்கிறாள். போர் நடக்கும் முன்பே கர்ணனுக்கு தன் சகோதரர்கள் பாண்டவர்கள் என்பது தெரியும். ஆனால் பாண்டவர்களுக்கு கர்ணனை தன் மூத்தவன் என்று தெரியாது. கர்ணனுக்கு அர்ஜுனன் தன் சகோதரன் என்றும் தெரிந்தாலும் அவன் மீது மிகுந்த வெறுப்புள்ளதால் அர்ஜுனனை கொல்ல துடிக்கிறான். மற்ற நால்வரையும் போர் முனையில் வெற்றி வரும் சூழ்நிலையிலும் உயிரோடு விடுகிறான். அர்ஜுனனும் கர்னனை கொள்ள சபதம் எடுத்துள்ளான். கர்னன் என்பவனை தான் தன்முனைப்பு( ஈகோ) என்று சொல்கிறோம். தன்முனைப்பு உள்ளவரை ஆத்மாவை அடைய இயலாது.

குருசேத்திர போரின் போது அர்ஜுனன் தன் சத்ரு அணியிலிருந்த பெரியப்பா பீஷ்மர், குருதேவர் துரோனாச்சாரியர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகிய அனைவரையும் எதிர்க்க விருப்பமில்லாமல் விலகினான். கிருஷ்னன் அர்ஜுனனிடம் இந்த போரின் போது நீ அவர்களை கொன்றாலும் கொல்லவில்லை என்று தான் அர்த்தம். நீ கவலை படாதே என்று அர்ஜுனனை ஊக்கபடுத்தி போரிட சொன்னார். அர்ஜுனன் என்பவன் யார்? கொன்றாலும் கொல்லவில்லை என்றாரே என்ன அர்த்தம்? ஆன்மிகத்தில் உயர்ந்த ஒருவனை தான் அர்ஜுனன் என்று சொல்கிறோம். அப்படி ஆன்மிகத்தில் உயர்ந்த ஒருவனுக்கு கெட்ட குணங்கள் இருக்காது என்று அர்த்தமில்லை. அப்படி பட்ட கெட்ட குணங்களை அழிக்க நடந்த போர் தான் குருசேத்திர போர். குருசேத்திர போர் என்பது உடலும் மனமும் சுத்தம் செய்ய ஒரு மனிதனுக்குள் நடந்த போர். யாரெல்லாம் மனதையும் உடலையும் சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ஆன்மிகத்தில் உயரத்தையும் கண்டுள்ளார்களோ அவர்களை அர்ஜுனன் என்று சொல்வார்கள். சத்ரு அணியிலிருந்த பீஷ்மரை தான் உடலின் மீதுள்ள பற்றை குறிப்பிடப்படுகிறது. உடல் பற்று உள்ள வரையில் ஆத்மாவை அறிந்துகொள்ள இயலாது. குருதேவர் துரோனாச்சாரியாரை ஞானத்தை விட உயர்ந்தது எதுவுமில்லை என்ற மனிதனுக்குள் உள்ள இயல்பு. அந்த ஞானத்தின் அகங்காரத்தை தவம்( போர் ) செய்து கொன்றால் தான் ஆத்மாவை அறிந்துகொள்ள முடியும்.

ஹஸ்தினாபுறம் என்பது என்ன. ஹஸ்தி என்றால் எலும்பு, புறம் என்றால் வீடு. எலும்புகளால் கட்டப்பட்ட வீட்டை தான் ஹஸ்தினாபுறம் என்று சொல்லப்படுகிறது. ஹஸ்தினாபுறத்தை பீஷ்மர் ஆட்சி செய்து வந்தார். இவர் தன் தந்தையின் காதலிக்கு அதாவது தன் சித்திக்கு வாக்களித்துள்ளார். தான் ஆட்சி புரியும் இந்த நாட்டை தங்கள் பிள்ளைகளிடம் ஒப்படைப்பேன் என்றும், தான் எக்காரனம் கொண்டும் திருமணம் செய்யமாட்டேன் என்றும், இந்த நாட்டின் மீதி எதிரிகள் படையெடுத்தால் எப்பேர்ப்பட்ட நிலையிலும் தங்கள் பிள்ளைகள் யார் ஆட்சி செய்தாலும் அவர்களின் சொல்லை உள்வாங்கி ஹஷ்தினாபுறத்தை( உடலை ) காப்பாற்றுவேன் என்று சபதம் மேற்கொண்டுள்ளார். பீஷ்மர் தன் நாட்டை(உடலை) காப்பாற்ற என்ன வேண்டுமானலும் செய்வார். இவரை அழிக்க முடியாத மாயை என்றும் சொல்வார்கள். யோகம் செய்யும் பொழுது உடலுடன் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். பேரின்பத்தை அடைய வேண்டுமென்றால் உடலையும் மனதையும் வெல்ல வேண்டுமே!. அதனால் தான் பீஷ்மரிடமிருந்து இந்த உடலை வெல்ல 18 நாள் போரில் 10 நாட்கள் போராட வேண்டிருந்தது. குருசேத்திர போர் நடப்பதற்க்கு முன்னும் நடக்கும் பொழுதும் துர்குணங்கள் என்று சொல்லப்படுகிற துரியோதன் ஆட்சி செய்து வந்ததால் பீஷ்மர் அவன் பேச்சை கேட்க வேண்டிய நிர்பந்தம். பீஷ்மருக்கு( நம்ம உடலுக்கு ) தெரியும் நம்மிடம் கெட்ட குணங்களாகிய கோபம், பேராசை, துக்கம், சிற்றின்பம், தன்னலம்,காமம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட துர்குனங்கள்( துரியோதனும் அவனின் சகோதரகளும் ) வரும் பொழுது உடலுக்கு துன்பம் ஏற்படுகிறது என்று. ஆனால் இப்பேற்பட்ட குணங்களால் மற்றவருக்கு ஏற்படும் பயம், நமக்கு கொடுக்கும் மரியாதை, நம்மை புகழ்ந்து பாடும் புகழ்ச்சி போன்ற இச்சைகளால் உடலின் மீது மிகுந்த காதல் கொண்டபடியால் உடலை துறக்க மனம் விரும்பாமல் யோகம் செய்யும் பொழுது நம்மை சரியான நிலைக்கு செல்ல விடாமல் மனமே தடுக்கும். அப்படிபட்ட உடலின் மீதுள்ள பற்றை தகர்த்தெரிந்தால் தான் பேரின்பம் கிடைக்கும்.

போர் நடப்பதற்க்கு முன்பு திருதிராஷ்டன் தன் தம்பியின் புதல்வர்களாகிய பாண்டவர்கள் மீது அன்பு செலுத்துவார். காந்தாரியும் அன்பு செலுத்தினாள். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் நடக்கும் போது தன் மகன் மீது மிகுந்த அன்பும் பாண்டவர்கள் மீது மிகுந்த வெறுப்பும் எதிர்ப்பும் உருவானது. என்ன நடந்தது என்று சற்று யோசிப்போம். கௌவரவர்களின் அரசனாக துரியோதனனும் அவனின் தம்பிகளையும் மனிதர்களின் மனதில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட துர்குணத்தை குறிக்கிறது. பாண்டவர்கள் ஐந்து பேரையும் அவர்களுக்கு ஒரு மனைவியையும் மனிதனுக்குள் இருக்கும் ஐந்து புலன்களையும் ஒரு சக்தியையும் குறிக்க கூடியது. துர்குணங்கள் ஒரு மனிதனுக்குள் நிறைந்திருக்கும் பொழுது அவனுடைய சக்தி பல வழிகளில் செல்வாகிகொண்டே இருக்குறது. தெய்வ குணங்கள் நோக்கி செல்லும் பொழுது சக்தி பாதுகாக்கிறது. யோகம் செய்யும் பொழுது உடலும் மனமும் ஆடாமலும் அசையாமலும் இருக்க வேண்டும். அப்படி செய்வதற்க்கு பல நிமிடங்கள் முதல் பல மணி நேரம் ஆகும். மனம் நல்ல கருத்துகளை விட தீய கருத்துக்களையும் தீய செயல்களையும் தான் விரும்பும். அந்த மனதை தூய்மை படுத்துவதற்க்கு உடலையும் மனதையும் பழக்க வேண்டும். தவம் செய்யும் பொழுது மனம் தன்னுல் ஆழ்ந்த அனுபவங்களும் சொந்த பந்தங்களும் அவர்களின் நல்ல தீய நினைவலைகள் ஆகிய அனைத்தும் நம்மை தியானம் செய்ய விடாமல் நம்மை எதிர்க்கும். துர்குணம் மீது அதிகம் பற்றிருந்தால் தவம் செய்யும் பொழுது கோபம், காமம், பேராசை போன்ற குணங்களினால் இழுத்து செல்லும். அதனால் தான் மஹபாரத போரின் போது துரியோதனனின் சகோதரர்கள்( துர்குணங்கள்) மரனம் ஏற்படும் பொழுது திருதிராஷ்டனுக்கும் காந்தாரிக்கும் துரியோதன் மீது பற்றும் பாண்டவர்கள் மீது வெறுப்பும் உருவானது.

மனதின் ஆழத்தில் ஆத்மாவை அடைய வேண்டும் என்ற எண்ணமும், அதே மனதில் நூற்றுக்கும் மேற்பட்ட துர்குணங்களும்( துருயோதனனும் அவனின் சகோதரர்களும்) போன்ற இருதுருவங்கள் ஒரு மனிதனுக்குள் இருக்கலாம். பக்தி மூலமோ அல்லது சரியான யோக பயிர்ச்சி மூலமோ ஆத்மாவை அடைய வேண்டும் என்ற எண்ணம் அதாவது அர்ஜுணன் நிலை அடைந்து விட்டால் கிருஷ்னன் தங்களை அடுத்த நிலைக்கு எடுத்த செல்ல தயங்கமாட்டார். மனமே கிருஷ்னன். அவன் உடுத்திய உடைய சற்று ஆய்வு செய்வோம். ஒரு கையில் சங்கும், ஒரு கையில் சக்கரமும், ஒரு கையில் கதையும் மற்றொரு கையில் தாமரையும், வாயில் புல்லாங்குழலையும் வைத்திருப்பார். அவர் உறங்கும் இடம் ஆதிசேசனாகிய சற்பமாகும். மனிதர்களின் ஐந்து புலண்களை பார்ப்போம். கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும், மூக்கால் நுகர்வதும், நாக்கால் சுவைப்பதும் , தோலினால் தொடு உணர்வை அனுபவிப்பது ஆகும். மனம் இந்த ஐந்து புல்ன்-கலால் உள்வாங்கும். சங்கும் காதும் ஒரே மாதிரி இருக்கும். சங்கு ஒலியை குறிப்பிடுகிறது. மூக்கும் கதையும் ஒரேமாதிரி இருக்கும். வாசனையை நுகர்வது. மூக்கிற்க்கும் ஜீவனுக்கும் இடையில் கதாகதம் செய்தால் உள்ளொளி பிறக்கும். சக்கரம் என்பது சுதர்ஷனத்தை குறிப்பதாகும். சுதர்ஷனம் என்பது பார்வை. ஒரே நேரத்தில் தூரத்திலிருக்கும் பொருளையும் அருகிலுள்ள பொருளையும் மிக வேகமாக கண்ணால் உள்வாங்க முடியும். அதனால் சக்கரத்தை ஏவினால் பல தலைகள் ஒரே நேரத்தில் வெட்டிவிடும். இப்படிபட்ட கண்ணை பக்குவபடுத்தவில்லை என்றால் சக்தி நாசமாகி சீக்கிரமாக உடல் அழிந்து விடும். தவம் செய்யும் பொழுது உடல் அழியாது ஆனால் தீவிர தவத்தினால் மனம் உடலின் மீதுள்ள பற்றை விட்டு விடும். சற்பமாகிய ஆதிசேசன் மூச்சுகாற்றை குறிப்பதாகும். அதவாது சுழிமுனையை குறிப்பதாகும். பாம்பு விசத்தை கொடுப்பதா அல்லது அமிர்தத்தை கொடுப்பதா என்பது மனதின் ஆளுமையை பொருத்துள்ளது. தாமரை என்பது ஞானம் அல்லது நெற்றிகண்ணை குறிப்பதாகும். மனதின் மூலம் யோகா செய்யும் முறையை உள்வாங்கி, புலன்-கள்லால் வெளியே செல்லும் மனதை ஜீவன் நோக்கி திருப்பினால் ஞானஒளியை அல்லது உள்ளொளியை பெறலாம் என்பது விஷ்னுவின்( கிருஷ்னன்) சிற்பம் அல்லது வரைபடத்தின் மூலம் தெரிந்துகொள்ளும் தத்துவமாகும்.

போர் செய்யும் முன் மனம் அழுக்கான நிலையில் இருக்கும். உடலும் மனமும் அழுக்கான நிலையிலிருந்து அழுக்கற்ற நிலைக்கு செல்லும் போது குருசேத்திர போர் நடந்தது. அந்த போர் முடிந்த பின் தர்மத்தால் நிறைந்த அதே மனதை தான் தர்மசேத்திரம் என்று அழைக்கிறோம். மனம் அசுரகுணங்களால் ( காமம், குரோதம், தன்முனைப்பு, பொறாமை) ஆக்கிரமைப்பு செய்தால் குருசேத்திரம் என்றும், அதே மனம் தர்மத்தால் நிறைந்தால் தர்மசேத்திரம் என்றும் சொல்லபடுகிறது.யோசிப்போம். செயல்படுவோம். உயருவோம்.

மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.

–சசிகுமார் சின்னராஜு

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *