மதுவை / குடிபோதையை நிறுத்த முடியுமா?

நமக்கு தேவையான சந்தோசம் கிடைக்கவில்லை என்றால் மயக்கம் தரும் போதை தான் தீர்வு என்று முடிவெடுக்கிறோம். உண்மை என்ன வென்றால் மனம் நிம்மதியை நாடுகிறது. அதற்க்கு நிம்மதி கிடைக்கவில்லை என்றால் ஏதோ ஒரு வழியில் சந்தோசத்தை தேடும். மதுவை குடிக்கும்பொழுது மெதுவாக பொறுமையாக அளவாக குடித்து இரசிக்கவும். ஒரு சிப் குடித்த பிறகு மதுவினால் ஏற்படும் உணர்வுகளை இரசியுங்கள். வேகமாக குடிக்கக்கூடாது. விரைவில் மதுவை விட்டுவிடுவீர்கள்.

வாழ்வில் சந்தோசத்தின் நீளத்தை தேடுங்கள். அது உங்கள் போதையை நிறுத்திவிடும். இறைவனிடமும் போதை இருக்கிறது. ஆனால் அவ்வளவு எளிதில் அதை பெற முடியாது. மனம் சுத்தமாக மாறும்பொழுது இறைவன் இறங்கி வருவான், தங்களை அணைப்பான். அவன் கொடுக்கும் போதை இந்த உலகில் எந்த பிராண்ட்( Brand ) மதுவுக்கும், வளமான அழகான ஆண் பெண் உறவில் ஏற்படும் இன்பத்திற்க்கும் ஈடாகாது. அதை தான் வாலைப்பெண் என்கிறோம். இந்திரலொகத்திலிருந்து இறங்கி வந்து விசுவாமித்திரரை மயக்கம் கொடுத்த மேனகை அவள். இயேசு கடைசி நாட்களில் தன் சீடர்களுடன் குடித்த மது இதுதான். இந்த இறைவனிடம் போதை கிடைக்கிற வரைக்கும் மனம் தளராது. அது தேடிக்கொண்டே இருக்கும்.

மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.

-சசிகுமார் சின்னராஜு

Share

sasikumar

i am sasikumar graduated as an Electrical and Electronics Engineer. Now i am working as software web developer. Since my college first year onwards my thoughts move towards peace and still i collecting information related to simple and happy living style. Here i share Information related to health, simple life style and yoga.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *