விநாயகர்

விநாயகன் என்பது விசேசமான ஒருவன் என்றும், வினைகளை கடந்தவன் என்றும் அறிப்படுகிறான்.

விநாயகனுக்கு சித்தி மற்றும் புத்தி என இரண்டு மனைவிகள். மனங்களை சித்தி, புத்தியாகவும் பிரிக்கப்படுகிறது. சித்தி என்பது உணர்ச்சிகள் மூலம் அறிவது. பசி, தாகம், அன்பு போன்ற உணர்வுகளை சித்தி என்று சொல்லப்படுகிறது.  புத்தி என்பது ஆறாம் அறிவை பெற்றவர். ஐம்பொறிகளாகிய கண், காது, மூக்கு, நாக்கு, தோள் மூலம் விசையங்களை உள்வாங்கி தெளிவை பெறுபவர்.

ஒரு தந்தம் உடைந்திருப்பது அகங்காரத்தை வென்றவர் என செய்தி.

யானையின் தும்பிக்கை மற்றும் பானை வயிற்றால் அழகு சேர்க்கப்பட்டுள்ளது. தும்பிக்கை என்பது முதுகு தண்டுவடத்தின் வழியாக உயிர் சுவாசம் நடைபெறுவதை உணர்ந்தோர். நீண்ட சுவாசத்தை உணர்ந்தோர். வாசி சித்தி அடைந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

வாசி சித்தி அடைந்தவர் ஐம்பூதங்களையும் ( கணம்  )  ஆள்பவர். கணங்களை கட்டுக்குள் வைத்திருப்பதால் கணபதி என்றும் சொல்கிறோம்.

வாசி நிலையில் ஒருவர் இருந்தால் சனி பிடிக்கமுடியாது. இன்று போய் நாளை வா என்ற கதைக்கு காரணம் இது தான். எமன் அருகில் வந்தாலும் உயிரை எடுக்கமுடியாது.

பானை வயிறு என்பது சித்தி, புத்தி மூலம் அறிவை நன்கு உண்டதை குறிப்பது.

பெரிய காது என்பது என்றும் நாதத்தை கேட்டுக்கொண்டிருப்பதை குறிப்பது.

மூஞ்சூறு( எலி ) வீட்டில் இருந்தால் எல்லா இடத்தையும் சுற்றுவது போல் மனத்தின் ஒவ்வொரு பகுதியாக ஆராய்ச்சி செய்து அறிவதை குறிப்பது. எண்ணங்கள் போன்ற அழுக்குகளை துடைப்பது.

கடவுளை உணர்ந்ததால் தெய்வமாக வணங்கலாம். விநாயகரையும் முருகனையும் தெய்வமாக வணங்கலாமே தவிர கடவுளாக அல்ல. கடவுளை உணர்ந்து, அறிவும் புத்தி கூர்மையும் உள்ள ஒருவர் மற்றவர்களை வழி நடத்த இயலும். ஆதலால் குரு என்றும் அழைக்கப்படுகிறார். இப்படி தகுதி உள்ள ஒருவர் நம்மை பார்த்தாலே புண்ணியம். குரு பார்த்தால் கோடி புண்ணியம் என்று சொல்ல காரணம் இதுவே.

விநாயகர் சிலை என்ற வரைப்படத்தை வைத்துக்கொண்டு மனிதர்களாகிய நாம் நம்மை பற்றி அறிவது. சாதி, மதத்திற்க்கு அப்பால் உள்ள ஒன்று. பக்தி அல்லது யோக சாதனை மூலம் அறிவதை குறிப்பது. தினம் கொண்டாட வேண்டிய ஒன்றை ஒரு நாள் அழகுப்படுத்திப்பார்க்கிறோம்.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.

–சசிகுமார் சின்னராஜு

Share

sasikumar

i am sasikumar graduated as an Electrical and Electronics Engineer. Now i am working as software web developer. Since my college first year onwards my thoughts move towards peace and still i collecting information related to simple and happy living style. Here i share Information related to health, simple life style and yoga.

One thought to “விநாயகர்”

  1. THANK YOU SO MUCH FOR SHARING SUCH GREAT POEMS, I WAS SEARCHING FOR THIS SIDHAR SONGS POEMS FOR SO LONG I CANT JUST EXPRESS HOW HAPPY AND CONTENTED AM WRIGHT NOW THANK YOU VERY MUCH

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *