உணவு

மனிதனுக்கு உணவு மிக அவசியம். மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினத்துக்கும் உணவு மிகவும் அவசியம். ஒவ்வொரு உயிரினமும் வெவ்வேறு வகையான உணவுகளை எடுத்துக்கொள்கிறது. சில உயிரினம் மற்ற உயிரினத்தை உணவாக எடுக்கிறது. சில உயிரினம் பூஜ்சைகளை உணவாகவும், சில உயிரினம் புல்லும் பூண்டுகளையும் பழங்களை உணவாக எடுத்துகொள்கிறது. சில உயிரினம் மனிதர்களால் சாப்பிட முடியாத கெட்டு போன உணவை உட்கொள்கிறது. சில உயிரனம் மற்ற உயிரினத்தின் கழிவுகளை உணவாக கொள்கிறது. மனித இனம் பழங்கள் காய்கள் இறைச்சி புல் பூண்டு போன்ற என்னெற்ற வகையான உணவுகளை உட்கொள்கிறான். மற்ற எந்த உயிரினத்துக்கும் இல்லாத அளவுக்கு மனிதனுக்கு உணவுகளை நீண்ட நாள் கெட்டு போகாமல் பாதுகாக்க பதபடுத்தும் திறமை உள்ளது. கரையாண்களை பார்க்கும் பொழுது அது சாப்பிடும் எல்லா பொருளையும் மண்ணாக மாற்றம் செய்வதாக தோற்றம் அளிக்கிறது. சமிபகால செய்தியான ஒரு நாட்டில் போர் மற்றும் வறட்சி காரணமாக மனிதர்கள் மண்ணை உணவாக உட்கொள்கிறார்கள் என்று கேள்வி பட்டதுண்டு. ஏன் ஒரு வருட குழந்தைகளுக்கு மண்ணை உட்கொள்ள ஆசை ஏற்படுகிறது.செடி, கொடி, மரங்கள் மண்ணும், தண்ணீரும் இல்லாத வளரமுடியாது. மண், தண்ணீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எல்லாமே உணவு தான். தண்ணீர் மட்டும் அருந்தி உயிர்வாழ்வதாக செய்தி படித்துள்ளேன். காற்று மட்டும் சாப்பிட்டு உயிர்வாழ்வதாக செய்தி படித்துள்ளேன். கொல்கத்தா பகுதியில் வசிக்கும் ஒருவர் காலை சூரியன் உதிக்கும் சமயத்தில் இருபது நிமிடம் சூரியனை பார்த்து விட்டால் அன்று உணவு முடிந்துவிடும். தண்ணீர் அருந்தமாட்டாராம், ஆனால் ஒரு நாள் இருவேளை சிறுநீர் கழிப்பாராம். காற்றிலே உள்ள ஈரப்பதத்தை தோல் உருஞ்சுவதால் சிறுநீர் கழிக்கிறார். பஞ்சத்தின் சமயத்தில் நீரீலும் நிலத்திலும் வாழும் தவளை நீண்ட நாள் ஒரு பாறைக்கடியில் உணவில்லாமல் வாழ்கிறது.உணவில்லாமல் வாழமுடியும் என்று சில நபர்கள் நிருபித்துள்ளதை கேள்வி பட்டதுண்டு. இந்த பதிவை தொடுக்கும் நானும் திட உணவில்லாமல் திரவ உணவான பழசாறில் ஆறிலிருந்து பத்து நாட்கள் இருந்ததுண்டு. தண்ணீர் மட்டும் அருந்தி ஒரு இரண்டு நாட்கள் இருந்ததுண்டு. உடலில் காயிச்சல் ஏற்பட்டால் திட உணவு முழுவதுமாக நிறுத்திகொள்வேன். திரவ உணவான தண்ணீரும் பழச்சாறும் மட்டும் அருந்துவேன். காய்ச்சல் சரியான பின்பு பழம் பின் திட உணவுக்கு மாறுவேன்.

உணவை மூன்று விதமாக பிரிகிறார்கள். சாத்வீக உணவு, ராஜச உணவு, தாமச உணவு. சாத்வீக உணவு என்பது எண்ண அலைகளை சாந்த படுத்தும் உணவான பழங்கள், காய்கறிகள். ரசமும் சத்தும் அதிகமாக உள்ள உணவு.ஆனந்தத்துக்கும் யோகாவுக்கும் நெருங்கிய உணவு. ராஜச உணவு என்பது பொறித்த மற்றும் காரசாரமான உணவு. இது எண்ண அலைகளான பேராசை, காமம் போன்ற குணங்களை ஊக்குவிக்கும். யோகாவுக்கு கொஞ்சம் தூரமான உணவு. தாமச உணவு என்பது ரசமற்ற உணவான காய்ந்த பழைய மற்றும் கெட்டுப்போன உணவு. இது தூக்கம், துக்கம், சோம்பல், பொறாமை போன்ற குணங்களை ஊக்குவிக்கும். இது யோகா செய்வதை தடுக்க கூடிய உணவு. எந்த வகையான உணவாக இருந்தாலும் நன்றாக மென்று அருந்தி உணவை சீரணம் செய்ய ஏற்றவாறு மாற்ற வேண்டும்.

பல துறைகளில் வளர்ந்த நாம் உணவு துறையையும் விடவில்லை. உணவு உற்பத்தி அதிகமாக உள்ளது போல் தோற்றம் அளிக்கிறது. அவ்வாறிருந்தும் எல்லா உயிருக்கும் நோயின் அறிகுறி அதிகமாக உள்ளது குறிப்பாக மனித சமுகத்துக்கு அதிகமான நோய் தாக்கப்படுகிறது. பெரும்பாலான மனிதர்களுக்கு பனத்தின் மீது மோகத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவ துறையையும் விடவில்லை. மருத்துவ துறைகளில் வேளை செய்யும் சில ஆராய்ச்சியாளர்கள் விச ஆயுதங்களை தயாரித்து அதற்கு மருந்தும் தயாரிக்கிறார்கள். ஒரு மாய வலையை உருவாக்கி மக்களிடம் பணம்( உழைப்பு ) பறிக்கிறார்கள்.

இன்று பெரும்பாலான மக்களுக்கு வாய் துர்நாற்றம், உடல் துர்நாற்றம், சளி பிரச்சனை, வயிற்று வலி, காயிச்சல், மூட்டு வலி போன்ற சிறிய பிரச்சனை தோன்றி கேன்சர், எயிட்ஸ், தசை சிதைவு, இரத்தம் கெடுதல் போன்ற பெரிய பிரச்சனை வரை வருகிறது. இது பெரும்பாலும் உணவை சாப்பிட தெரியாமலும், உணவில் கலப்படம் செய்வதாலும், உடல் சீரண சக்திக்கு மீறிய உணவு எடுப்பதாலும், மனதை கெடுப்பதாலும் வருகிறது. உணவு, உடலுறவு, உடல் உழைப்பு மற்றும் எண்ணம் போன்றவற்றை சரியான அளவு பயன்படுத்த வேண்டும். இதில் ஏதோ ஒன்றை அதிகமாக பயன்படுத்தினால் உடல் சமநிலை குறைந்துவிடும். பணத்தின் மீது மோகத்தை ஏற்படுத்தி உடல் உழைப்பை அதிக படுத்தினார்கள். கல்வி என்ற பெயரில் மக்களிடம் மோகத்தை ஏற்படுத்தி பெற்றோர்கள் மீது உழைப்பை திணித்தார்கள். இன்று பெரும்பாலான கல்வித்துறையில் இருப்பது தேவையில்லாத பாடம். இந்த தேவையில்லாத கல்வியை பதிநாண்கு வயதுக்கு குறைவான குழைந்தைகளுக்கு கட்டாயம் செய்து பாடத்துக்கு கல்வி கட்டணம் அதிகமாக வசுல்செய்து பெற்றோர்கள் மீது பாரத்தை சுமித்தினார்கள். வேலையும் கல்வியும் கட்டாயமாக்கப்பட்டதால் உணவின் நேரத்தை பொதுவாக செய்தார்கள். காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என்ற மூன்று வேளை உணவை எடுத்துக்கூறி காலப்போக்கில் மூன்று வேலையும் மக்களே நினைத்து மூன்று வேளை உணவை எடுக்க ஆரம்பித்தனர். அதிகமாக உழைத்தாலும் மூன்று வேலை, வேலை செய்யவில்லை என்றாலும் மூன்று வேலை உணவு எடுக்க ஆரம்பித்தார்கள். இதனால் உடலுக்கு நிமிடத்க்கு நிமிடம் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மூன்று வேளை உணவினால் உணவு உற்பத்தி சுழற்ச்சி பாதிக்கபடுகிறது. இன்று மூன்று வேளை உணவு மட்டுமா சாப்பிடராங்க! அதுக்கும் மேலே. காலை உணவுக்கு முன் ஒரு இடை உணவான பால், தேநீர், குழம்பி, பிஷ்கட், பன். காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைவேளையில் ஒரு இடை உணவு. மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையில் ஒரு இடை உணவு. இதனால் உணவு உற்பத்தி சுழற்ச்சி மிகவும் பாதிக்கபடுகிறது. இந்த உணவு உற்பத்தி சுழற்ச்சி பாதிப்படைந்தால் நமக்கு என்ன? நம்ம உடல் நல்லா இருக்க! இல்லை. உடலில் குடலுக்கு சீரணம் செய்ய முடியாமல் கழிவு தேக்கம் அதிகமாகி முதலில் சளி, காயிச்சல், இருமல் போன்ற சிறிய பிரச்சனையை உருவாக்கும். பின்பு பெரிய பிரச்சனையை உருவாக்கி இரத்தம் கெட்டு போக ஆரம்பிக்கும். இரத்தம் கெட்டுப்போனால் கேன்சர், எயிட்ஸ், மூளை கோளாறு, இதய பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை, கல்லீரல், மண்ணீரல், தோல் வியாதி போன்ற எல்லா நோயும் வரும். மாசடைந்த விதை வளமான செடி கொடி மரங்களை உருவாக்காது. அது போல உடலில் சில பிரச்சனைகளை வைத்துகொண்டு உடலுறவு கொண்டால் பிறக்கும் குழந்தைக்கு அந்த தாக்கத்தை ஏற்படுத்தும். பிறந்த குழந்தை தினம் தினம் பிரச்சனைகளோடு இருந்தால் என்று தான் அது நிம்மதியோடு இருக்கும்.

இதுக்கு என்னதான் செய்யலாம்?
1. முதலில் சாப்பிட தெரிய வேண்டும். இரண்டாவது வாழ தெரிய வேண்டும். எப்படி சாப்பிட்டால் இந்த பெரும்பாலான பிரச்சனையிலிருந்து விடுபடலாம். விருந்தினர் வரும் பொழுது நாம் சொல்லும் வாக்கியம் உணவு அருந்தலாம் வாங்க. தண்ணீர் சாப்பிடலாம் வாங்க என்று . அதை செய்கிறோமா! உணவை அருந்தாலாம் என்றால் உணவை குடிக்க வேண்டும். சாப்பிடும் திடப்பொருளை எப்படி குடிப்பது? உணவை நன்றாக மென்று தண்ணீர் போன்று வாயிலே மாற்ற வேண்டும். பின்பு குடிக்க வேண்டும். உணவு சிறுநாக்கு பகுதிக்கு முன் தண்ணீர் போன்று மாற்றி குடித்தால் தான் உடலில் சக்தி( குளுக்கோஸ் ) உருவாகும். அப்படி செய்ய வில்லை என்றால் இரத்தமாக மாறாமல் இரத்தம் கெட்டுபோக ஆரம்பிக்கும்.

2. தண்ணீர் சாப்பிட தெரிய வேண்டும். எப்படி என்றால் தண்ணீரை வாயிலே வைத்து தேநீர் போன்று வைத்து பத்தில் இருந்து பதினைந்து நொடி வரை சுவைத்து பின் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் தான் சக்தி உருவாகும். தண்ணீரில் சக்தி இருக்க! நிச்சயம் தண்ணீரில் சக்தி இருக்குது. அந்த தண்ணீரை சக்தியாக மாற்ற தெரிய வேண்டும். மடக் மடக் என்று குடித்தால் சக்தியாக மாறாது. எல்லா திரவப்பொருளும் இப்படி தான் சாப்பிட வேண்டும். மற்றும் தண்ணீரை பொருத்த வரை தாகம் எடுக்கும் பொழுது தான் சாப்பிட வேண்டும். தேநீர் அல்லது கசயாமாக இருந்தாலும் ஆறவைத்து பின் சுவைத்து சாப்பிடவேண்டும்.

3. பசித்தால் தான் சாப்பிட வேண்டும். பசிக்காமல் சாப்பிட்டால் உடலுக்கு நோய் வரும். வேளை வேளை என்று சொல்லி நம்மை நம் மனதுக்கு விழிப்புணர்வு இல்லாமல் சாப்பிட வைத்து வேலைக்கு செல்ல வைத்தார்கள். இந்த பழக்கத்தினால் பசித்தாலும் பசிக்காவிட்டாலும் காலை மாலை இரவு என்று மூன்று வேலை உணவை சாப்பிடுகிறோம். யோகி ஒரு வேளையும், போகி இரண்டு வேளையும், ரோகி மூன்று வேளையும் உண்பார்கள். யோகி என்பவர் எந்த வேளையும் செய்யாமல் சும்மா இருப்பது. அதனால் ஒரு வேளை உணவு போதும். போகி என்பவர் வெளிப்புற மகிழ்ச்சியாகிய மிதமான காமம், மிதமான பொருளாசையினால் இரண்டு வேளை உண்பார். சாப்பிட தெரிந்தால் ஒரு மனிதனுக்கு இரண்டு வேளை உணவு போதுமான உணவு. அதற்கும் மீறி மூன்று, நாண்கு வேளை சாப்பிட்டால் உடலில் நோய் ஏற்படும். நோய் வந்தால் அவனுக்கு ரோகி என்று கூறுவார். இரண்டு வேளை உணவு என்பது காலையிலும் மாலையிலும் ( 6 மணிக்கு) முன் உணவு. பெரும்பாலும் பகலில் விழித்திருக்கும் உயிரினம் சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு சாப்பிடாது. அது போல் நாம் இருந்தால் நோய் அண்டாது. நாம் 10 மணிக்கு சாப்பிட்டு தூங்க சென்றால் நோய் வராமல் என்ன செய்யும்? சாப்பிட்டால் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தூங்க செல்ல வேண்டும்.

4.வயிற்றில் சீரணம் செய்வதற்க்கான நெருப்பு உள்ளது. அந்த நெருப்பு சாப்பிடும் பொழுது அனையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்க்கு முன் தண்ணீர் சாப்பிட்டல் நெருப்பு அனைந்து விடும். நெருப்பு அனைந்தால் சீரணம் கெட்டு விடும். சாப்பிடும் பொழுதும் தண்ணீர் சாப்பிட கூடாது. சாப்பிட்ட பின்னும் தண்ணீர் சாப்பிட கூடாது. நாம் சாப்பாட்டை தண்ணீர் போன்று சாப்பிட்டல் இடையிலும் கடைசியிலும் தாகம் எடுக்காது தொண்டையும் அடைக்காது. ஒரு நாழிகை ( அரை மணி நேரம் ) முன்னும் ஒரு நாழிகை பின்னும் தண்ணீர் சாப்பிடலாம்.

5. நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்றால் பசிக்கும் நேரத்துக்கு சாப்பிட வேண்டும்.காலை 8 மணி, மதியம் 1 மணி, இரவு 7-8 மணி என்றில்லை. கொஞ்சம் மாற்றியதால் எவ்வளவு பிரச்சனை என்று பாருங்கள். பள்ளி கல்லூரியில் போய் படித்துவிட்டால் எல்லா அறிவும் வந்து விட்டதாக நினைப்பு வந்தால் அது தவறு. நீங்கள் அலோபதி, சித்த, அயுர்வேதம் மருத்துவம் படித்தாலும் யோகத்தை பற்றி எந்த அறிவும் இல்லை என்றால் அறிவு மலராது. விருப்பு வெறுப்பில்லாமல் அன்பு இருந்தால் அறிவு மலரும். பெரும்பாலான மருத்துவர்கள் வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். வியாபாரம் செய்பவர்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்று அவசியமில்லை. சும்மா இருப்பதற்க்காக ( யோகா ஞானம் ) செலவு செய்யுங்கள். மற்ற எல்லா கல்வியும் உங்களை அழிவு பாதைக்கு அழைத்து செல்லும்.

6. சாப்பிடும் பொழுது சுகாசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. சாப்பிடும் பொழுது கண், காது, மூக்கு, நாக்கு, ஸ்பரிசம் எல்லாம் உணவின் மீது கவனம் இருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் உடலில் உண்ணும் உணவு சக்தியாக ( குளுக்கோஸ்) மாறும். இல்லை என்றால் சக்தி உடலில் சேராது.

7. மனதினை அமைதியாக வைத்து பழகுங்கள். மனதினை அதிகமாக ஓடவிட்டால் பொய் பசி எடுக்க ஆரம்பிக்கும். அதுவும் உடலை கெடுத்து விடும். பெரும்பாலான ஆரய்ச்சியாளர்கள் உடல் நலம் கெட்டவர்களாக காணப்படுகின்றனர்.

மேலே சொன்ன கருத்துக்கள் எல்லாம் உடலை பக்குவபடுத்துவதற்காக. உடலில் கேன்சர் எயிட்ஸ் போன்ற எப்பேற்பட்ட வியாதி வந்தாலும் மேலே சொன்ன கருத்துகளை நடைமுறை படுத்தபட்டால் சரியாகும். ஏனென்றால் யோகா செய்யும் பொழுது இன்னல்கள் வராமல் பார்த்து கொள்ள வேண்டியது நமது கடமை. இந்த தகுதி எல்லாம் யோகா செய்வதற்க்கு அடிப்படை. சும்மா கை கால் அசைத்தால் யோகா கிடையாது. அமர்ந்த நிலையில் எவ்வளவு வலி ஏற்பட்டாலும் உடல் மீது விருப்பு வெறுப்பில்லாமல் வைராக்கிய மனதோடு தன்னை அறிய முயற்ச்சி செய்ய வேண்டும். கை கால் அசையாமல் நிமிர்ந்து உட்காறுவதற்க்கு சக்தி அவசியம்.

நாம் தவறாக உணவு உண்பதாலும் மனதை கெடுப்பதாலும் எத்தனையோ மருந்து உற்பத்தியாளர்களும், மருத்துவ கல்லூரிகளும், அதை சார்ந்த பொறியியல் உற்பத்தியாளர்களும் வந்துள்ளனர். இதனால் பல வகையில் இயற்கையை அழிக்கிறோம். அதன் சீற்றத்தை நம்மால் தடுக்க இயலாது. தேவையில்லாத ஒன்றை தேவை என்று கருதும் ஒரு வகையான மாயை இது. இதை நன்கு உனர்ந்த பல மருத்துவ வல்லுனர்கள் மற்றும் மருந்து தயாரிப்பாளர்கள் மேலும் மக்களின் மனதை கெடுத்து வியாபாரம் செய்கின்றனர். இதை தடுக்க வேண்டும். மருத்துவமனை, பள்ளி கல்லூரிகள் மற்றும் தனியாக அரசாங்க அமைப்பை உருவாக்கி மேல கூறிய கருத்துகளை வரும் மக்களிடம் எடுத்து கூற வேண்டும். குறைந்து வரும் எரிவாய்வினால் பல போர்கள் நடக்கின்றன. திடிர் என்று எரிவாய்வை நிறுத்தினால் பல உள்நாட்டு போர் நிகழும். அதை முன்-கூட்டிய தடுக்க வேண்டும்.

முன்பு நாம் விறகால் சமைத்தோம். இன்று பெரும்பாலும் வீடுகளில் சமையல் எரிவாய்வு, மிண்காந்த அடுப்பு உள்ளது. இந்த பூமியில் 700 கோடி மக்களுக்கு மேல் உள்ளனர். அனைவரும் விறகால் சமைத்தால் இந்த இயற்கை வளம் கெடும். அது போல தான் சமையல் எரிவாய்வு எண்ணையும். பூமியிலிருந்து எடுக்க கூடிய அனைத்தும் நமக்கு இயற்கை சீற்றங்களால் துன்பத்தை கொடுக்கும். நாம் பெரும்பாலும் சமைத்த உணவை உண்கிறோம். ஒரு வேளை உணவை சமைக்காமல் சாப்பிட்டால் இயற்கையை நாமும் பாதுகாக்கலாம்.

உணவை நன்றாக மென்று சக்தியாக மாற்ற தெரிந்தால் மூன்று வேளைக்கு மேல் சாப்பிடும் நாம் இரண்டு வேளையாக மாற்றாலாம். பின்பு ஒரு வேளையாக மாற்றிவிட்டால் உணவை எடுத்து செல்லும் வாகனத்தை குறைத்து விடலாம். வாகனம் குறைந்தால் பூமியிலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவை குறைத்துவிடலாம். பின்பு உணவு பயிர்களுக்கு அடிக்கபடும் மருந்துகளை குறைத்து விடலாம். உணவை குறைத்தால் உற்பத்தியாகும் உணவை வறட்சியான பகுதிக்கோ அல்லது வறட்சியான நாட்டிற்கோ கொடுக்கலாம்.

உணவு பாதுகாப்பு! உணவு பாதுகாப்பு! என்று சொல்லி உணவு உற்பத்தியை மாற்றுவிதை மற்றும் மருந்தடித்து அதிகப்படுத்தினீர்கள். ஆனால் உணவு சாப்பிடும் முறையை மக்களிடம் விளிப்புணர்வை ஏற்படுத்திருந்தால் உணவையும் பாதுகாக்கலாம் இந்த பூமியையும் பாதுகாக்கலாம்.

நல்லா சாப்பிட வேண்டும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று தான் நாம் அதிகமாக உழைக்கிறோம். நோய் ஏற்படாமல் இருந்தால் எவ்வளவு பணம் மிச்சம்.
உடலில் சக்தி சேரும் வழியில் உணவை உட்கொண்டால் நாம் அதிகமாக உழைக்க அவசியமில்லை. நாம் சாப்பிடும் பொழுது உணவை சக்தியாக மாற்றுவதற்க்கு உழைத்தால் உடல் நமக்கு எந்த தொந்தரவும் செய்யாது. நோயும் ஏற்படாமல் பணமும் செலவில்லாமல் அதிகமாக உழைக்காமல் நாம் வாழ்கையை நடத்தினால் எவ்வளவு இன்பம். சிந்திப்போம். செயல்படுவோம்.

மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.

–சசிகுமார் சின்னராஜு

Share

sasikumar

i am sasikumar graduated as an Electrical and Electronics Engineer. Now i am working as software web developer. Since my college first year onwards my thoughts move towards peace and still i collecting information related to simple and happy living style. Here i share Information related to health, simple life style and yoga.

One thought to “உணவு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *