வறட்சியும் நிவாரனமும்

தாங்கள் விளையும் உணவு பொருள்களில் தக்காளி, கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், கரும்பு, பழங்கள், தென்னைமரம் பயிர் செய்வதை குறையுங்கள். விற்பது என்று முடிவிருந்தால் பாரம்பரிய பயிர் வகையான கம்பு, சோளம், ராகி, சாமை போன்ற தண்ணீர் குறைவான உணவு பொருளை விற்றுக்கொள்ளுங்கள்.

விற்கும் பொருளில் தண்ணீர் பொதிந்து இருக்க கூடாது. தக்காளி, கத்திரிக்காய் போன்ற உணவுப்பொருளை வடகம் அல்லது தூள் செய்து விற்றுக்கொள்ளுங்கள். தக்காளி, கரும்பு, கேரட், வெள்ளரிக்காய் போன்ற உணவுப்பொருளின் விலையை விளைந்தால் நஷ்டம் ஏற்படும் அளவுக்கு குறைக்கவேண்டும்.

பால் மாடு என்று சொல்லும் ஜெர்சி மாடுகளை வளர்காமல் இருப்பது மிகவும் நல்லது. வளர்த்தால் தங்கள் ஊருக்கு வறட்சி வருவதை யாராலும் தடுக்கமுடியாது. அரசாங்கம் கட்டாயமாக பால் விலையை குறைக்க வேண்டும் மற்றும் பால் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். எவனை பற்றியும் கவலைப்படாமல் பொதுநலன் கருதி தடை செய்யவேண்டும்.

ஏற்றுமதி செய்யும் எந்த பொருளிலும் திரவம் போன்று தண்ணீர் இருக்க கூடாது. கப்பல் துறைமுகத்திலும் விமானத்திலும் ஏற்றுமதி செய்யும் அளவை குறைக்க வேண்டும்.

வாகனங்களின் வேகத்தை எப்படியாவது குறைக்க வேண்டும். தார் சாலை பழுதுப்பட்டால் புதிய சாலைகளை அமைக்ககூடாது. ஓர் ஊரில் தார் சாலைகளும் வேகமாக செல்லக்கூடிய வாகனம் இருப்பதால்தானே தண்ணீர் மறைமுகமாக ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு வேகமாக கொண்டுசெல்லப்படுகிறது.

கல்யாணத்திலும் கருமாதியிலும் மற்றும் பல விசேசங்களில் ஆடம்பரம் மற்றும் அதிகமான கூட்டத்தை குறைப்பது மிகவும் நல்லது.

கல்யாணத்திற்க்கு பரிசு பொருட்கள், பணம் வாங்குவது தவிர்க்கபட வேண்டும். கல்யாணம் தொடர்ந்து நடைபெறுவதால் நீங்கள் மற்றவருக்கு செய்வதும் அவர்கள் தங்களுக்கு செய்வதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். கல்யாணத்திற்க்கு அழைக்கிறார்கள் என்றால் தங்களின் வாழ்த்து பெறுவதற்க்காக தான். தாங்கள் வாழ்த்தை வழங்குவதற்க்கு பதில் பணத்தையும் பரிசு பொருளையும் கொடுத்து வியாபாரம் செய்வதால் தவிர்க்கமுடியாத பல மாயைகளில் சிக்கி இயற்கையை அழித்துகொண்டிருக்கிறோம்.

பாரம்பரியத்தில் விளைந்த முழு தானியங்களை அதாவது நெல்லை வைத்துகொண்டுதான் வாழ்த்துவார்கள். அதுவுமில்லாமல் வாழ்த்தும் பொழுது நெல்லை மெதுவாக மனமகள் மற்றும் மனமகன் உச்சந்தலையில் வைத்துவிட்டு வரவேண்டும். இதுதான் வாழ்த்தும் முறை. ஆனால் இன்று அரிசியில் மஞ்சள் கலந்து வாழ்த்துகிறோம். அமர்ந்த இடத்திலிருந்து மஞ்சள் கலந்த அரிசியை தூக்கி மணமக்களின் மீது வீசுகிறோம். இது தவறான பன்பாடு. இந்த தவறான பன்பாடுகளில் விருப்பமில்லாமல் பணங்களையும் பரிசுப்பொருளையும் கொடுக்கிறோம். இதனால் வறட்சி ஏற்படுவதற்க்கு வாய்ப்பு அதிகம்.

கருமாதியிலும் இதே நிலைமை தான். செத்து போன பிணத்திற்க்கு எதற்க்கு மதிப்பும் மரியாதையும். பத்து பேர் சேர்ந்து அந்த பிணத்தை புதைத்து ஒரு செடியை நட்டுவிட்டால் அந்த செடிக்கு பலம் வரும். அல்லது ஒரு மரத்திற்க்கு அருகில் புதைத்தால் மரத்திற்க்கு உரமாக மாறிவிடும். அதற்க்கு பதில் பல சடங்குகள் செய்து பிணத்தின் உயிர் பிரிவதற்க்கு முன் சொந்தத்துக்கு செலவு செய்ய தூண்டப்படுகின்றன. அதனால் இயற்கை அழிகிறது. தேவையில்லாத பல சடங்குகளை குறைப்பது மிகவும் நல்லது. சமாதி என்ற பெயரில் பல தவறான பழக்கக்கங்களை மேற்கொள்கின்றனர்.

ஜீவன் பிரிந்த பிறகு உடல் துர்நாற்றம் வீசாமல் இருக்கும் உடலை சரியான முறையில் பாதுகாக்க படவேண்டும். அவர்கள் தவசீலர்களாக இருக்ககூடும். அவர்களுக்கு தான் சரியான முறையில் சமாதி அடக்கம் செய்ய வேண்டும். துர்நாற்றம் வீசும் உடலுக்கு அதிகமான மக்களுக்கு கூறாமல் புதைத்து விடவேண்டும். அதுவே துர்நாற்றம் வீசாமல் உடல் அழுகாமல் இருக்கும் உடலுக்கு அதிகமான தொந்தரவு செய்யாமல் சரியான முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று பெரியோர்களின் கூற்று.

தற்பொழுதுள்ள மெஷினரிஸ் பெற்றோல் டீசல் தட்டுப்பாட்டால் இன்னும் பத்து வருடத்துக்குள் காணாமல் சென்றுவிடும். அதனால் கல்வித்துறைகளில் அதுபோன்ற பாடங்களை குறைப்பது மிகவும் நல்லது.

கல்வித்துறைகளில் கல்விக்கட்டணங்களை மிகவும் குறைக்க வேண்டும். அரசாங்கம் பள்ளிகளையும் கல்லூரிகளையும் கட்டுப்பாட்டிற்க்கு கொண்டுவந்து அரசாங்கம் நடத்தவேண்டும். இல்லையென்றால் தன்பிள்ளைகள் நன்றாக படிக்கவேண்டும் என்ற சிந்தைனையால் ஆசைதூண்டப்பட்டு வறட்சி அதிகமாகும்.

எல்லாத்துறைகளிலும் வேலையின் நேரத்தையும் சம்பலத்தையும் குறைக்கப்பட்டால் பல அன்பர்களுக்கு வேலை கொடுக்கலாம். அதாவது எட்டு மணி நேரம் வேலையை ஒரு ஐந்து மணி நேரம் வேலையாக குறைக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் புரட்சியும் கலவரமும் பலவகையில் வெடித்து அரசாங்கம் தந்நிலை இழந்துவிடும்.

உணவுகளை நன்றாக மென்று அரைத்து கூழ்போல் மாற்றி அதற்க்கு மேல் தண்ணீர் போன்று மாற்றி உண்ண வேண்டும். பசி எடுக்கும் பொழுதுதான் சாப்பிட வேண்டும். தாகம் எடுக்கும் பொழுது தான் தண்ணீரை சாப்பிட வேண்டும். உணவுகளை மதிக்காத மக்கள் அதிகமாக இருந்தால் வறட்சி வரும்.

நாம் தவறாக உணவு உண்பதாலும் மனதை கெடுப்பதாலும் எத்தனையோ மருந்து உற்பத்தியாளர்களும், மருத்துவ கல்லூரிகளும், அதை சார்ந்த பொறியியல் உற்பத்தியாளர்களும் வந்துள்ளனர். இதனால் பல வகையில் இயற்கையை அழிக்கிறோம். அதன் சீற்றத்தை நம்மால் தடுக்க இயலாது. தேவையில்லாத ஒன்றை தேவை என்று கருதும் ஒரு வகையான மாயை இது. இதை நன்கு உனர்ந்த பல மருத்துவ வல்லுனர்கள் மற்றும் மருந்து தயாரிப்பாளர்கள் மேலும் மக்களின் மனதை கெடுத்து வியாபாரம் செய்கின்றனர். இதை தடுக்க வேண்டும். மருத்துவமனை, பள்ளி கல்லூரிகள் மற்றும் தனியாக அரசாங்க அமைப்பை உருவாக்கி எப்படி உணவை சாப்பிடுவது குறித்து விளிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ரத்தன் டாடா, அம்பானி சகோதரர்கள், பில்கேட்ஷ் போன்ற பணக்காரர்களை தொலைக்காட்சியிலும் பாடபுத்தகத்திலும் சொல்லக்கூடாது. அப்படியே சொன்னாலும் அவர்கள் கண்டுபிடித்த விசயங்களை தான் கூற வேண்டும். பணத்தை முன்னிலை படுத்தி மக்களை ஊக்குவிக்ககூடாது. இத்தனை நாட்கள் சொன்னது வேறு. இனிமேல் பணம் வைத்தவர்களை பற்றி பேசுவதையோ அல்லது பிரபலப்படுத்துவதையோ தவிர்க்கவேண்டும்.

நிலத்தின் உரிமையாளர்களை இனிமேல் குறைக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு நிலத்திற்க்கு மேல் உள்ளவர்களிடம் அரசாங்கம் கையகப்படுத்தவேண்டும். ஒரு நிலத்திற்க்கு குறிப்பிட்ட வருடத்திற்க்கு எடுத்துக்காட்டாக ஒரு ஐந்து வருடத்திற்க்கு மட்டும் தான் உரிமை கொடுக்க வேண்டும். அதற்க்கு பிறது மீண்டும் புதுப்பிக்க வேண்டும். உரிமையை எடுக்க விரும்புவோர் இயற்கை மற்றும் விவசாய சம்பந்தமான அறிவுகளையும் வைத்திருக்க வேண்டும். நாட்டிற்க்கு எதாவது ஒரு துறையில் வேலை செய்திருக்க வேண்டும். சதுர்வர்ணத்தில் பயிற்ச்சி பெற்று வைஷ்னவ நிலைக்கு மேல் இருக்க வேண்டும். எத்தனை வருடங்கள் நிலம் உரிமை வைத்திருந்தாலும் வைஷ்னவ நிலைக்கு மேல் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

ஆடம்பரத்தை குறைப்பது மிகவும் நல்லது. ஆடம்பரம் இருப்பதால் தானே வறட்சி ஏற்படுகிறது. அவசியமான உணவை தவிர எல்லாமே ஆடம்பரம் தான். ஆடம்பரம் எப்பொழுது வருகிறது என்றால் தன்னுடைய உடல் பாகங்களை மறைப்பதற்க்கு முயலும் போது வருகிறது. தன்னுடைய பிள்ளைகள், தன்னுடைய நிலம், தன்னுடைய பெற்றோர்கள், தன்னுடைய வீடு என்று எண்ணும் பொழுது ஆடம்பரம் முளைக்கிறது. இதை ஏதோ ஒரு வழியில் தடுக்க வேண்டும்.

பெண்களுக்கு ஆண்களுக்கு என்று தணித்துவமான உடைகளை தயாரிக்கமால் எல்லோருக்கும் ஒரே விதமான ஆடைகளை தயாரித்தால் ஆடைமீதான மோகம் குறைந்து விடும். பெண்களுக்கும் ஆண்களுக்கும் தங்களுடைய உடல் பாகங்களால் கூச்சம் வருவதை சிறுவயதிலே நிர்வானப்படுத்தி கூச்சத்தை கிள்ளி எறிய வேண்டும். ஆண்களானாலும் பெண்களானாலும் குற்றம் புரிந்தால் நிர்வாணத்தை தண்டனையாக கொடுக்க வேண்டும். இதனாலும் கூச்சம் குறைக்கப்பட்டு தேவையில்லாத உடை அணியும் பழக்கம் குறைந்து விடும். ஆடைகளை விளம்பரபடுத்தும் நடிகை நடிகர்கள் வீட்டீலும் நாட்டிலும் கூச்சமே இல்லாமல் நிர்வானமாக உளா வருகிறார்கள். ஆனால் அந்த விளம்பரத்தை பார்க்கும் நாம் குளிக்கும் பொழுது கூட ஆடையை துறப்பதில்லை. வெப்ப சூழ்நிலையான நாடுகளில் ஆடை பழக்கம் மிகவும் குறைவு. ஆனால் நம் நாட்டிலோ தூங்கும் பொழுதும், குளிக்கும் பொழுதும் உடை அணிகிறோம். மற்ற நாடுகளில் உள்ளது போல் கடற்கரை, பூங்கா போன்ற இடங்களில் நிர்வானத்தை ஊக்கப்படுத்த வேண்டும். காசியில் நிர்வாணமாக அகோரிகள் நடந்து செல்வதை போல் ஒவ்வொரு ஏறியாவுக்கும் சென்றால் ஆடை பழக்கம் குறைந்து விடுமோ! சில நேரங்களில் தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் ஆண்களும் பெண்களும் நிர்வான போரட்டம் நடத்துகிறார்கள் என்று சொல்வதுண்டு. அப்ப அது தவறு என்று சிந்தித்தேன். ஆனால் வறட்சியை பார்க்கும் பொழுது அது சரி என்று தோன்றுகிறது. சிறு குழந்தைகளுக்கு ஆடை மோகத்தை ஏற்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது. ஐம்பது வயதை தாண்டியவர்கள் தங்கள் ஆடைகளை கொஞ்சம் கொஞ்சமாக துறப்பது மிகவும் நல்லது என்று தோன்றுகிறது. திருப்பூர் போன்ற மாவட்டத்தில் ஆடைகளால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. வாழத்தகுதில்லாத இடமாக மாறிவிட்டது.

இயற்கையாக வாழும் எந்த உயிரணங்களுக்கும் ஆடை பழக்கமில்லை. மனிதர்களால் மட்டுமே இவ்வளவு வறட்சி ஏற்படுகிறது.தேவையில்லாத ஆடைபழக்கத்தை குறைத்தால் தங்கள் பகுதி வறட்சியிலிருந்து மீட்டு விடலாம்.

தண்ணீர் தேங்குவதற்க்காக பழைய குளம், ஏரிகள், அணைகள் புதுப்பிக்க படவேண்டும். தேவையில்லாத வேலைகளை விட்டுவிட்டு தண்ணீர் தேங்குவதற்க்காக உழைத்தால் இயற்கை வளம்பெறும்.

தற்பொழுதுள்ள அரசியலில் எப்படி ஒருவரை ஏமாற்றி பிழைப்பது போன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இதன் காரனமாக பலவிதமான சங்கடங்கள் நடக்கிறது.

மக்களுக்கு ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் அதே சமயம் ஆடம்பரமில்லாமல் பழக்கப்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் மனிதர்களையும் சேர்த்து பல உயிர்கள் வறட்சியால் மடிவதை தடுக்கமுடியாது.

வறட்சி வந்துகொண்டிருக்கிறது. நாம் அதை எதிர்கொள்ள தேவை உள்ளது. எம்மனதிற்க்கு வந்த கருத்துகளை பதிவு செய்துள்ளேன். பிடித்திருந்தால் கருத்துகளை ஆழமாக சிந்தியுங்கள். அதை மற்றவருடன் பகிருங்கள். இதுபோன்று மாற்றங்களை செய்தாலே இமயம் முதல் குமரி வரை எங்கும் பசுமை ஓங்கும். மாற்றங்களுக்கான தங்கள் கருத்துகளும் வரவேற்க்கபடுகின்றன. மாற்றம் தேவைப்படுகிறது. யோசிப்போம். செயல்படுவோம். உயருவோம்.

மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
–சசிகுமார் சின்னராஜு

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *