(அ)சைவமும் கோயிலும்

சைவம் என்றால் இறைச்சி இல்லாத உணவும், அசைவம் என்றால் இறைச்சி உணவு என பெரும்பாலும் நம்பப்படுகிறது. சைவம் சாப்பிடுபவர்கள் சுத்தமானவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள் என்றும் நம்பப்படுகிறது. சைவம் சாப்பிடுபவர்களாகிய பிராமணர், சைவ வேளாளர், சைவ செட்டியார் போன்ற கூட்டமான மக்கள் உயர்ந்த சாதியாகவும், மாட்டு இறைச்சியை சாப்பிடாமல் இறைச்சி சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் அடுத்த கட்ட சாதியாகவும், மாட்டிறைச்சி சாப்பிடுபர்கள் கீழ் சாதியாகும் கருதப்படுகிறது. சில மதத்தில் பன்னிக்கறியை சாப்பிட்டால் கீழ் சாதியாக கருதப்படுகிறது. சிவன், விஷ்னுவை வணங்குபவர்கள் சைவமாகவும் பார்வதி, காளி, அம்மன் இன்னும் பிற சிலையை வணங்குபவர்கள் அசைவமாவும் கருதபடுகிறது. இது தவறான எண்ணம். ஒவ்வொருவரும் தங்கள் தொழிலுக்கு தகுந்தார் போல் இறைச்சியை எடுத்துக்கொள்ளலாமா அல்லது வேண்டாமா என்று யோசித்து வாழ்ந்தவர்கள், பிறகு மக்கள் கூட்டமாக தனிப்பட்ட தொழில் செய்யும் பொழுது சாதியாக உருவாகி இருக்கலாம். வெயிலில்,சூட்டீல் அல்லது அதிக வேலை செய்பவர்கள் இறைச்சியை எடுத்துக்கொண்டிருக்கலாம். குறைந்த வேலை செய்பவர்கள் இறைச்சியை எடுத்துக்கொள்வதை தவிர்த்திருக்க வேண்டும் அல்லது எடுத்துக்கொள்ளும் அளவை குறைத்திருக்கவேண்டும். இப்படி வாழ்ந்த மக்கள் கூட்டமாக வாழும் பொழுது சைவ சாதியாகும் அசைவ சாதியாகவும் பிரிக்கப்பட்டிருக்கலாம். அதற்க்காக இறைச்சியை சாப்பிடாதவர்கள் உயர்ந்த வகுப்பை சேர்ந்தவர்கள், இறைச்சியை எடுத்துக்கொள்பவர்கள் தாழ்ந்த வகுப்பை சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் மிகவும் தவறாகும்.

அசைவம் சாப்பிட்டு ஏன் கோயிலுக்கு செல்ல கூடாது?

அசைவம் சாப்பிட்டால் சீரனம் செய்ய 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரமாகும். அசைவம் சாப்பிட்டால் பல மணி நேரத்திற்க்கு பிறகு தான் தியானத்தை தொடர முடியும். சாதரனமாக சாப்பிட்டாலே 3மணி நேரத்திற்க்கு பிறகு தான் தியானத்தை தொடங்க முடியும். அசைவமாகிய இறைச்சி சாப்பிட்டால் வயிறு இளகுவாக குறைந்தது 6 மணி நேரமாகும். அதற்க்கு பிறகு தான் தியானத்தை தொடங்க முடியும். இறைச்சி மட்டுமில்லை கடினமான எந்த பொருளை எடுத்துக்கொண்டாலும் இது தான் பிரச்சனை. அதனால் இறைச்சி சாப்பிட்டால் கோயிலுக்கு போக கூடாதுன்னு சொல்லப்படுகிறது.

கோயிலுக்கும் தியானத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். சம்பந்தம் இருக்கிறது. கோயில் என்று சொல் கேட்டாலே சிவன், விஷ்னு, முருகன், அம்மன் மற்றும் பல கட்டிடங்களால் செய்யப்பட்ட கோயில் தான் 99.99% மக்கள் நம்புகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. இந்த கட்டிடங்களால் செய்யப்பட்ட கோயில் கடவுளை பற்றி அறிவு மலருவதற்க்காக கட்டப்பட்டதாகும். பல விதமான தத்துவங்கள் கோயில் கட்டிடத்தில் பொதிந்து கிடக்கிறது. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது, ஆனால் சொல்லித்தர அல்லது அது மூலம் கத்திரிக்காய் இந்த வடித்தில் உள்ளது என புரிந்து கொள்ள முடியும். அது போன்று தான் கட்டிடங்களால் செய்யப்பட்ட கோயிலும்.

கோயில் என்று சொன்னால் நம் உடலை தாண்டி உள்ளத்தை தான் குறிக்கும். அது சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் கடவுள் நமக்கு காட்சி கொடுப்பார் என்று பெரியவர்களின் கூற்று. அசுத்தமாக கோயிலிருந்தால் அதாவது அசுத்தமான மனமிருந்தால் கடவுள் காட்சி கொடுக்கமாட்டார். கட்டிடங்களால் செய்யப்பட்ட கோயிலுக்கு தேங்காய் எடுத்து செல்கிறோம். தேங்காய் உடைக்கும் பொழுது கெட்டுப்போயிருந்தால் நமக்கு கெட்டது வரப்போகிறது என்று மூடப்பழக்கம் நம்மில் கானாலாம். சுத்தமாக கெடாமல் இருந்தால் கடவுள் கருனை காட்டுகிறார் என்று எண்ணமுண்டு. மூடத்தனமாக இருந்தாலும் தேங்காய் உடைப்பதற்க்கு பின்னாடி தத்துவம் பொதிந்து கிடக்கிறது. தேங்காயை தான் மனதை குறிக்கிறது. மனம் அழுக்கில்லாமல் இருந்தால் நமக்கு கடவுள் சீக்கிரம் காட்சி கொடுத்து விடுவார். அழுக்கான காமம், கோபம், பொறாமை, வஞ்சம் போன்ற குணமிருந்தால் கடவுள் நிச்சயமாக காட்சி கொடுக்க மாட்டார். நம் வீட்டுத்தரையை கூட்டாமல் விட்டாலே அழுக்கு படிந்து விடும். தினம் கூட்ட வேண்டும், அப்பப்ப ஒட்டடையை சுத்தம் செய்து வீட்டை கழுவ வேண்டும். அதுபோல தான் மனதையும் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். எப்படி வீட்டீலும் கோயிலிலும் காற்றை சுத்தம் செய்வதற்க்கு விளக்கு வைக்கிறோமோ அப்படி மனதை சுத்தம் செய்வதற்க்கு தியானம்/ யோகா முறை உண்டு. இப்படி தான் வெளிப்புறமான கோயிலுக்கும் தியானத்துக்கும் சம்பந்தம் உண்டு.

யோகா செய்வதற்க்கு முன்னாடி நம் உடலில் கழிவு தேக்கமிருக்க கூடாது. கழிவு தேக்கமிருந்தால் தியானத்தை தொடங்க பல மணி நேரமாகும், அப்படி தொடங்கினால் கெட்ட வாய்வு/காற்று தலைப்பகுதிக்கு சென்று விடும். இது உடலுக்கு பல ஆபத்துகளை ஏற்படுத்தும். அசைவமோ அல்லது கடினமான பொருளை உட்கொண்டால் சீரணம் செய்வதற்க்கு பல மணி நேரமாகும். ஆதலால் அசைவம் சாப்பிட்டு கோயிலுக்கு செல்ல கூடாதுன்னு சொல்லபடுகிறது. அசைவம் என்ற உடனே இறைச்சி என்ற எண்ணம் தான் பல அன்பர்களுக்கு இருக்கும். வாயால் உண்பதையும் அசைவம் என்று தான் சொல்லப்படுகிறது. சைவம் என்றால் தியானத்தில் அமர்ந்து தவத்திற்க்கு வரும் பொழுது ஒரு விதமான அமிர்தம் உடலில் இறங்கும், அதை தான் சைவம் என்று கூறப்படுகிறது. இன்னும் பிற அர்தங்கள் என்னவென்றால் சைவம் என்பது கடவுளை உணர்ந்தவர், அசைவம் என்றால் கடவுளை உணராதவர். நடைமுறையில் அசைவம் சாப்பிட்டால் கட்டிடங்களால் செய்யப்பட்ட கோயிலுக்கு செல்ல கூடாதுன்னு சொல்லபடுகிறது. அது எப்படி என்றால் வயிறு சுத்தமாக வைத்துக்கொண்டு கோயிலுக்கு செல்ல வேண்டும். என்னதான் மூடத்தனமாக இருந்தாலும் இதை மாற்றாமல் நடைமுறை செய்ய வேண்டும்.

இறைச்சியை சாப்பிடாமல் பழம், காய், கீரை, பருப்பு வகைகளை சாப்பிடுபவர்கள் உயர்ந்தவர்கள், இறைச்சியை சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் மிகவும் தவறாகும். ஒவ்வொருவருக்கும் என்ன உணவு கிடைக்கிறதோ அதை தான் சாப்பிட முடியும். எந்த உணவை எடுத்துக்கொண்டாலும் சீரணம் செய்வதற்க்கு உதவுமாறு நன்றாக மென்று அரைத்து தண்ணீர் போன்று மாற்றி சாப்பிட்டால் உடலுக்கும் உயிருக்கும் நல்லது. யோசிப்போம். செயல்படுவோம். உயருவோம்.

மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு

Share

One Reply to “(அ)சைவமும் கோயிலும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *