நேமிநாதம்
நேமிநாதம்  » சொல்லதிகாரம்  » உருபு மயங்கியல்


« வேற்றுமை மரபு 
விளி மரபு » 


47.  வேற்றுமை யொன்றன் உரிமைக்கண் வேறொன்று
தோற்றல் உருபு தொகவருதல் - ஏற்றபொருண்
மாறினுந் தானிற்றல் வந்தொன்றின் ஒன்றேற்ற
றேறவரு மெய்ந்நுற் றெளிவு .

48.  இருசொல் லிருதி யிரண்டே ழலாத
உருபு தொகாதென் றுரைப்ப - வுருபுதான்
தொக்க விடத்துடனே தொக்கும் விரியுமிடத்
தொக்கவிரி சொல்லு முள.

49.  ஒன்றன்பேர் ஒன்றற்கு உரைப்பதாம் ஆகுபெயர்
சென்றவைந்தாந் தம்முதலிற் சேர்தலோடு - ஒன்றாத
வேறொன்றிற் சேர்தல் எனவிரண்டாம் வேற்கண்ணாய்
ஈறு திரிதலுமுண் டீண்டு.


« வேற்றுமை மரபு 
விளி மரபு » 


Meta Information:
உருபு மயங்கியல்,சொல்லதிகாரம்,நேமிநாதம் இலக்கணம் nannool