நேமிநாதம்
நேமிநாதம்  » சொல்லதிகாரம்  » உரிச்சொல் மரபு


« இடைச்சொல் மரபு 
எச்ச மரபு » 


82.  ஒண்பேர் வினையொடுந் தோன்றி யுரிச்சொலிசை
பண்பு குறிப்பாற் பரந்தியலும் - எண்சேர்
பலசொல் லொருபொருட் கேற்றுமொரு சொற்றான்
பலபொருட் கேற்றவும் பட்டு.

83.  கம்பலை சும்மை கலியழுங்கல் ஆர்ப்பரவம்
நம்பொடு மேவு நசையாகும் - வம்பு
நிலையின்மை பொன்மை னிறம்பசலை என்ப
விலைநொடை வாளொளியாம் வேறு.

84.  விரைவு விளக்கம் மிகுதி சிறப்பு
வரைவு புதுமையுடன் கூர்மை - புரைதீர்
கரிப்பையங் காப்பச்சந் தேற்றமீ ராருந்
தெரிக்கிற் கடிசொற் றிறம்.

85.  வெம்மை விருப்பாம் வியலகல மாகுமரி
யைம்மையெய் யாமை யறியாமை - கொம்மை
யிளமை நளிசெறிவாம் ஏயேற்றம் மல்லல்
வளமை வயம்வலியாம் வந்து.

86.  புரையுயர் பாகும் புனிறீன் றணிமை
விரைவாங் கதழ்வுந் துனைவுங் - குரையொலியாஞ்
சொல்லுங் கமமுந் துவன்று நிறைவாகும்
எல்லும் விளக்க மெனல்.


« இடைச்சொல் மரபு 
எச்ச மரபு » 


Meta Information:
உரிச்சொல் மரபு,சொல்லதிகாரம்,நேமிநாதம் இலக்கணம் nannool